இன்று என்ன? - வருங்காலத்தை கணித்த நாஸ்ட்ரடாமஸ்

இன்று என்ன? - வருங்காலத்தை கணித்த நாஸ்ட்ரடாமஸ்
Updated on
1 min read

எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், மூலிகை மருத்துவர், ஜோதிடக்கலையில் சிறந்து விளங்கியவர் மைக்கேல்-டி-நாஸ்ட்ரடாமஸ். இவர் பிரான்ஸ் நாட்டில் 1503 டிசம்பர் 14-ம் தேதி பிறந்தார். 15 வயதில் அவிக்னன் பல்கலைக்கழகத்தில் படித்தார். அந்த நேரத்தில் பிளேக் நோய் பரவியதால் பல்கலைக்கழகம் மூடப்பட்டது. 1521-ல் மூலிகை சிகிச்சை ஆராய்ச்சி செய்து பிளேக் நோய்க்கு மருந்து தயாரித்து விற்றார். இவரது கணிப்பு, வழக்கமான ஜோதிட முறைகளுக்கு அப்பாற்பட்டு இருந்தது. இதற்கு உதவியாக ஒரு பொறி இயந்திரத்தைப் பயன்படுத்தினார்.

அதை பார்த்துதான் ‘தி செஞ்சுரீஸ்’ என்ற புகழ்பெற்ற ஆரூட புத்தகத்தை எழுதினார். பல பதிப்புகளாக வெளிவந்த இவரது புத்தகங்களில் 6,338 ஆரூடங்களை எழுதியுள்ளார். 1555-ல் ‘லெஸ் புராஃபடீஸ்’ Les Propheties (The Prophecies) என்ற முக்கியமான நூலின் முதல் பதிப்பு வெளியானது. நெப்போலியன், ஹிட்லர் ஆகியோரின் எழுச்சி, இரண்டு உலகப் போர்கள், ஹிரோஷிமா, நாகசாகி அணுகுண்டு பேரழிவு, அமெரிக்க இரட்டைக் கோபுரத் தாக்குதல் போன்ற வரலாற்று சம்பவங்களை முன்கூட்டியே குறிப்புகளாக அதில் எழுதியிருந்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in