இன்று என்ன? - மதராஸ் பெயர் மாற காரணமான சங்கரலிங்கனார்

இன்று என்ன? - மதராஸ் பெயர் மாற காரணமான சங்கரலிங்கனார்
Updated on
1 min read

மதராஸ் மாநிலம் என்று அழைக்கப்பட்ட பகுதிக்கு ”தமிழ்நாடு” என்று பெயர் வைக்கச் சொல்லி உண்ணாவிரதமிருந்து உயிர்விட்ட போராளி சங்கரலிங்கனார். இவர் விருதுநகரை அடுத்த மண்மலைமேடு ஊரில் 1895-ல் பிறந்தவர். காங்கிரசில் மிகுந்த ஈடுபாட்டுடன் இருந்தார். கதர் விற்பனையில் ஆர்வம் செலுத்திய சங்கரலிங்கம் காந்தியுடன் தண்டி யாத்திரையிலும் பங்கேற்றார். தன்னுடைய சொத்துக்களை விருதுநகரில் உள்ள பள்ளிக்கு எழுதி வைத்துவிட்டார்.

இவர் காங்கிரஸ் அரசுக்கு 1956-ல் 12 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்தார். தனியாக மொழிவாரி மாகாணம் வேண்டும். சென்னை மாகாணத்திற்கு "தமிழ்நாடு" என்று பெயர் சூட்ட வேண்டும். அரசியல் தலைவர்கள் ஆடம்பரச் செலவுகளைக் குறைத்து சாதாரண மக்களைப் போல் வாழ வேண்டும். தேர்தல் முறையில் மாற்றம் வேண்டும். தொழில்கல்வி, இந்தியா முழுவதும் மதுவிலக்கு என்று பன்னிரெண்டு கோரிக்கைகளுடன், சூலக்கரை மேட்டில் தனியாளாக உண்ணாவிரதத்தைத் தொடங்கினார். இவரை தொடர்ந்து சென்னை நகரக் கல்லூரி மாணவர்கள் ஒருநாள் உண்ணாவிரதம் இருந்தனர்.

1956 அக்டோபர் 13-ம்தேதி காலமானார். தியாகி சங்கரலிங்கனாரின் நினைவைப் போற்றும் வகையில் தமிழக‍ அரசால் விருதுநகர் கல்லூரி சாலையில் நகராட்சி பூங்கா அருகில் மணிமண்டபம் கட்டப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in