இன்று என்ன? - எம்ஜிஆர்-ஐ விட அதிக சம்பளம் வாங்கியவர்

இன்று என்ன? - எம்ஜிஆர்-ஐ விட அதிக சம்பளம் வாங்கியவர்
Updated on
1 min read

நாடகம், அரசியல், திரைப்படம், ஆன்மிகம் எனப் பல துறைகளிலும் புகழ் பெற்றவர் கே. பி. சுந்தராம்பாள். இவர் 1908 அக்டோபர் 11-ம் தேதி ஈரோடு கொடுமுடியில் பிறந்ததால் கொடுமுடி கோகிலம் என்றும் அழைக்கப்பட்டார். கொடுமுடி லண்டன் மிஷன் பள்ளியில் படித்தார்.

கரூரில் நடந்த நல்லதங்காள் நாடகத்தில் நல்லதங்காளின் மூத்த பிள்ளை ஞானசேகரன் வேடத்தை 10 வயதில் சுந்தராம்பாள் ஏற்று நடித்தார். ‘பசிக்குதே! வயிறு பசிக்குதே’ என்ற பாடலை மிக அருமையாகப் பாடி ரசிகர்களிடன் பாராட்டைப் பெற்றார். இயக்குநர் ஏ.பி.நாகராஜனின் ‘திருவிளையாடல்’ படத்தில், அவ்வைப்பாட்டியாக நடித்து ‘பழம் நீயப்பா’ என்ற பாடலை கணீர் குரலில் பாடி தமிழ் சமூகத்தில் தனது வரலாறு நிலைபெறச் செய்தார். ‘மகாகவி காளிதாஸ்’, ‘காரைக்கால் அம்மையார்’ உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். அன்று பிரபல நடிகர்களான எம்ஜிஆர் சிவாஜியை விட அதிகம் சம்பளமாக ரூ. 1 லட்சம் வாங்கியவர் சுந்தரம்பாள்.

காங்கிரஸ் பிரச்சாரங்களான கதர் இயக்கம், தீண்டாமை ஒழிப்பு, வெள்ளை ஏகாதிபத்திய எதிர்ப்பு ஆகியவற்றுக்கு ஆதரவாக பாடல்களை பாடினார். 1958-ல் தமிழக சட்டமேலவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1970-ல் பத்ம விருது வழங்கி இந்திய அரசு கவுரவித்தது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in