Published : 10 Aug 2023 04:00 AM
Last Updated : 10 Aug 2023 04:00 AM

இன்று என்ன? - தொழிலாளர் தலைவர் வி.வி.

இந்தியாவின் நான்காவது குடியரசு தலைவர் வி. வி. கிரி 1894 ஆகஸ்ட் 10-ம் தேதி அன்றைய மதராஸ் மாகாணத்தில் கஞ்சம் மாவட்டத்தில் பிறந்தார்.

பெர்ஹாம்பூரில் உள்ள கல்லிகோட் கல்லூரியில் படித்தார், பின்னர் சட்டம் படிக்க 1913-ல் டப்ளின் சென்றார். இந்தியா திரும்பியதும், புதிய தொழிலாளர் இயக்கத்தில் சேர்ந்தார். அவர் பொதுச் செயலாளராகவும் பின்னர் அகில இந்திய ரயில்வே மேன்கள் கூட்டமைப்பின் தலைவராகவும் இருமுறை இருந்தார்.

1936-ம் ஆண்டு நடைபெற்ற மதராஸ் பொது தேர்தலில் வெற்றி பெற்றார். 1942-ல் "வெள்ளையனே வெளியேறு" இயக்கத்திற்கு ஆதரவு அளித்தார். உத்தரபிரதேசம், கேரளா மற்றும் மைசூர் மாநிலங்களின் ஆளுநராக பணியாற்றினார். 1967-ம்ஆண்டு இந்தியாவின் துணை குடியரசு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1969-74 வரை குடியரசுத்தலைவராக இருந்தார். இவர் "தொழில் நிறுவனங்களின் உறவுகள்", "இந்திய தொழில் நிறுவனங்களில் உழைப்பாளர் பிரச்சினைகள்" உள்ளிட்ட புத்தகங்கள் எழுதியுள்ளார். இந்தியாவின் தலைசிறந்த விருதான பாரத ரத்னா 1975-ம் ஆண்டு வழங்கி கவுரவிக்கப்பட்டார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x