Published : 04 Aug 2023 04:00 AM
Last Updated : 04 Aug 2023 04:00 AM

இன்று என்ன? - வெள்ளை மாளிகையில்: கருப்பு நிலா

அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் உசைன் ஒபாமா தெற்கு அமெரிக்காவில் 1961 ஆகஸ்ட் 4-ம் தேதி பிறந்தார். புனாஹோ பள்ளியில் படித்த பின் இரண்டு ஆண்டுகள் லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள ஆக்ஸிடென்டல் கல்லூரியில் பயின்றார். நியூயார்க் நகரத்தில் உள்ள கொலம்பியா பல்கலைக்கழகத்தில் 1983-ல்அரசியல் அறிவியலில் பட்டம் பெற்றார்.

கல்லூரிகாலத்தில் வில்லியம் ஷேக்ஸ்பியர், ஃபிரெட்ரிக் நீட்சே , டோனி மோரிசன் ஆகியோரின் இலக்கியம் மற்றும் தத்துவப் படைப்புகளைப் படித்தார். பிசினஸ் இன்டர்நேஷனல் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் எழுத்தாளர் மற்றும் ஆசிரியராக பணியாற்றினார்.

சட்டப் படிப்பு முடித்த பிறகு, சிகாகோவுக்குச் சென்று ஜனநாயகக் கட்சியில் செயல்பட்டார். தனது முதல் புத்தகமான “ட்ரீம்ஸ் ஃப்ரம் மை ஃபாதர்” 1995-ல் வெளியிட்டார். சிகாகோ பல்கலைக்கழகத்தில் அரசியலமைப்பு சட்ட விரிவுரை மற்றும் சிவில் உரிமைகள் பிரச்சினைகளில் வழக்கறிஞராக பணியாற்றினார். 2008-ம் ஆண்டு அமெரிக்காவின் 44-வது ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். 2009-ல் அமைதிக்கான நோபல் பரிசு பெற்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x