

பொருளாதாரத்தின் தந்தை என்று அழைக்கப்படுபவர் ஆடம் ஸ்மித். இவர் ஸ்காட்லாந்தின் எடின் பர்கில் பிறந்தார். கிரிகால்டி பர்க் பள்ளியில் கல்வி பயின்றார். லத்தீன், கணிதம், வரலாறு ஆகியவற்றைக் கற்றுக்கொண்டார்.
ஒழுக்க உணர்வுக் கோட்பாடு, நாடுகளின் செல்வத்தின் இயல்புகள், காரணங்கள் குறித்த ஆய்வு நூல்களை எழுதியுள்ளார். பொருளியலில் உள்ள அடிப்படை அரசியல் சிந்தனையை கூறியவர் ஸ்மித்.
ஆக்ஸ்ஃபோர்ட் போட்லியன் நூலகத்தில் இருந்து பல புத்தகங்களைப் படித்ததன் மூலம் பல விஷயங்களை கற்றுக்கொள்வதற்கு அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. 1751-ல்கிளாஸ்கோ பல்கலைக்கழகத்தில் தத்துவ ஆசிரியராகப் பணியாற்றினார். 1759-ல்“அறநெறி தத்துவக் கோட்பாடு” என்ற நூலை வெளியிட்டார். 1776-ல்நாடுகளின் செல்வம் என்ற சிறந்த புத்தகத்தை வெளியிட்டார். 1790 ஜூலை 17-ல் காலமானார்.