இன்று என்ன? - லேசர் தொழில்நுட்ப கண்டுபிடிப்பாளர்

இன்று என்ன? - லேசர் தொழில்நுட்ப கண்டுபிடிப்பாளர்
Updated on
1 min read

அமெரிக்க இயற்பியலாளர் தியடோர் ஹாரோல்டு டெட் மைமன், அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 1927 ஜூலை 11-ம் தேதி பிறந்தார். மின்பொறியாளரான தந்தை செய்யும் சோதனைகளுக்கு உதவியாக இருந்தார். இந்த அனுபவம் மூலம் மின் கருவிகள், வானொலி ஆகியவற்றைப் பழுதுபார்த்து வருமானம் ஈட்டினார்.

நேஷனல் யூனியன் ரேடியோ நிறுவனத்தில் 17 வயதில் பொறியாளராக நியமிக்கப்பட்டார். இரண்டாம் உலகப்போரின்போது, கடற்படையில் பணி புரிந்தார். கொலராடோ பல்கலைக்கழகத்தில் பொறியியல் இயற்பியலில் இளங்கலைப் பட்டம் பெற்றார். ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் மின் பொறியியலில் முதுகலைப் பட்டம் பெற்றார். செறிவூட்டப்பட்ட ஒளி என்கிற ‘லேசர்’ கருவியை உருவாக்கினார். அதை 1960-ல்வெற்றிகரமாக இயக்கிக் காட்டினார்.

அவரது லேசர் தொழில்நுட்ப கண்டுபிடிப்பு இன்று, தடிமனான இரும்பை அறுக்கவும், அலுமினிய குழாய்களை ஒட்டவைக்கவும், கணினி, டிவிடி, அச்சு இயந்திரங்கள், ஸ்கேனர்கள் போன்ற பல்துறை சார்ந்தவற்றுக்கும் பயன்படுத்தப்படுகிறது. மரணத்துக்குப் பிறகு இவருக்கு ‘ஸ்டான்ஃபோர்டு இன்ஜினீயரிங் ஹீரோ’ என்ற பெயரை சூட்டி ஸ்டான் ஃபோர்டு பல்கலைக்கழகம் கவுரவப்படுத்தியது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in