இன்று என்ன? - தற்செயலாக படித்து சாதித்தவர்

இன்று என்ன? - தற்செயலாக படித்து சாதித்தவர்
Updated on
1 min read

விண்மீன்களின் தொலைவைத் துல்லியமாகக் கணிக்கும் வழியைக் கண்டறிந்தவர் அமெரிக்க பெண் வானியலாளரான ஹென்ரியேட்டா ஸ்வான் லீவிட். இவர் 1868 ஜூலை 4-ம் தேதி மசாசூசெட்சுவில் உள்ள லான் கேச்டெரில் பிறந்தார். கல்லூரியில் கிரேக்கம், நுண்கலைகள், தத்துவம், பகுப்பாய்வு வடிவியல் மற்றும் நுண்கணிதம் பயின்று பட்டம் பெற்றார். கல்லூரி இறுதி ஆண்டில் வானியல் பாடத்தைத் தேர்வு செய்தார்.தற்செயலாக எடுத்த முடிவு என்றாலும், வானியலே இவரது வாழ்க்கையானது.

திடீரென்று ஏற்பட்ட காய்ச்சலின் பாதிப்பால் கேட்கும் திறனை நிரந்தரமாக இழந்தார். 1880-ல் ஹார்வர்ட் வான் ஆராய்ச்சி நிலையத்தில் எடுக்கப்பட்ட ஆயிரக்கணக்கான புகைப்படத் தட்டுகளை ஆய்வு செய்ய நியமிக்கப் பட்டார்.

புகைப்பட பிளேட்டுகளில் சிபிட்ஸ் வேரியபிள் ஸ்டார்ஸ் (Cepheid Variable Stars) என்ற விண்மீன்களின் ஒளி மாறுபாட்டு வேகமும், அவற்றின் ஒளிர் திறன் கொண்ட 2,400 வேரியபிள் விண்மீன்களைக் கண்டறிந்தார். கண்டறிந்த தைக் கட்டுரையாக வெளியிட்டார். நிலவில் உள்ள சிறுகோள், குழிப்பள்ளம் என பலவற்றுக்கு இவரது பெயர் சூட்டப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in