உலகின் இளம் சாம்பியன்

உலகின் இளம் சாம்பியன்
Updated on
1 min read

உலகப் புகழ்பெற்ற அமெரிக்க குத்துச்சண்டை வீரர் மைக் டைசன். இவர் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள ப்ரூக்ளினில் 1966 ஜூன் 30-ம் தேதி பிறந்தார். தந்தை கைவிட்டதால் தாய் வேலை செய்து மகனை காப்பாற்றினார். சிறுவர் சீர்திருத்தப் பள்ளி ஆலோசகரும் குத்துச்சண்டை வீரருமான பாபி ஸ்டூவர்ட், இவரது குத்துச்சண்டை திறனை அறிந்து பயிற்சி அளித்தார்.

டைசன் 1982-ல் ஜூனியர் ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்றார். 1985-ல் நியூயார்க்கின் அல்பனீ நகரில் முதல்முறையாக தொழில்முறை விளையாட்டைத் தொடங்கினார். தனது முதல் 28 போட்டிகளில் 26-ல் வென்றார். 1986-ல் உலக ஹெவிவெய்ட் சாம்பியன் பட்டம் வென்று ‘உலகின் இளம் சாம்பியன்’ என்ற பெருமையைப் பெற்றார்.

இவரது கைகளின் வேகம், துல்லியம், ஆற்றல், கால தீர்மானம் ஆகியவை அபாரமானவை என்கின்றனர் நிபுணர்கள். உலக பாக்ஸிங் அசோசியேஷன், உலக பாக்ஸிங் கவுன்சில், உலக பாக்ஸிங் பெடரேஷன் என 3 அமைப்புகளின் முக்கிய பட்டங்களையும் வென்ற முதல் ஹெவிவெய்ட் சாம்பியன் இவர். ரசிகர்களால் ‘இளம் வெடி’, ‘இரும்பு மைக்’ என போற்றப்படுகிறார். 2013-ல் வெளிவந்த ‘Undisputed Truth’ எனும் இவரது சுயசரிதை பிறகு ஆவணப்படமாகவும் எடுக்கப்பட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in