

எல்லோருமே பிறக்கும் போது ஒரே அறிவோடு தான் பிறக்கிறோம். ஆனால், ஐன்ஸ்டீன் மட்டும் எப்படி புவியீர்ப்பு விசையை கண்டுபிடித்தார்? சினிமாவில் வரும் கதை மட்டும் எப்படி ஹிட் ஆகுது? நம்ம மட்டும் ஏன் அப்படி ஏதும் கண்டு பிடிக்கல? யோசிக்கல? அப்படின்னு ஒரு கேள்வி வருதா?
எல்லாமே நம்ம பார்க்கிற விதத்தில் தான் இருக்கு. ஒரு பிரச்சினையை பிரச்சினையா பார்த்தா சிக்கலா மட்டும்தான் தெரியும். அதுவே சிக்கலை தீர்ப்பதற்கான வழியை தேடினால் இதெல்லாம் ஒரு பிரச்சினையா அப்படின்னு நம்மளே சொல்லுவோம்.
அதே மாதிரிதான் ஒரு பொருளை சாதாரணமாக பார்க்காமல் கொஞ்சம் வித்தியாசமா பாருங்க, யோசிங்க. இது இப்படி இருந்தா என்னவாகும்னு யோசிங்க, இதை மாற்றினால் என்ன நடக்கும் என கேள்வி உருவாக்குங்க, அதுக்கு உரிய தீர்வை கண்டு பிடிங்க, கண்டு பிடிச்சே ஆகனும் என கூட அவசியம் இல்லை.
இப்படி யோசிச்சு கேள்வி கேட்டாலே நீங்களும் படைப்பாற்றலும் கற்பதை திறனும் மிகுந்த ஆளுமையாக மாறத் தொடங்குவீங்க. எல்லாவற்றுக்கும் ஏதாவது ஒரு விடை இருக்கும். தேடும்வரை தான் கஷ்டமாக இருக்கும். சிறிது வேலைசெய்யுங்கள், நமது இலக்கை அடைந்து விடலாம்.
புத்திசாலித்தனம் என்ற வார்த்தை நம்ம எல்லோருக்குமே தெரியும். அப்படிப்பட்ட புத்திசாலித்தனம் நிறைய இருந்தால் வாழ்க்கையில் ஜெயிக்கலாம் என்றுகூட பலர் சொல்ல கேட்டிருப்போம். ஆனால், பல ஆராய்ச்சியின் முடிவில் வெளிவந்த உண்மை என்னவென்றால் ஓரளவு புத்திசாலித்தனம் உள்ள மனிதர்களே வாழ்க்கையில் நிறைய வெற்றிகளைப் பெற்றுள்ளனர்.
ஏனென்றால் புத்திசாலித்தனமாக யோசிப்பதை விடவும் வித்தியாசமா கற்பனை திறனுடன் யோசிப்பதும் புதிய கண்டுபிடிப்புகளுக்கு உதவி இருக்கு.
எனக்கு, எனது கணக்கு வகுப்பில் ஒரு சந்தேகம் வந்தது. சதுரம் ஒரு 2டி வடிவம், அதன் 3டி வடிவம் தான் கன சதுரம் (Cube) அப்படின்னு என் ஆசிரியர் கூறினார். அப்போ கன சதுரத்தினுடைய உடைய 4டி என்னவா இருக்கும் அப்படின்னு நான் யோசிச்சேன்.
தெரிஞ்சிகிட்டேன். கேள்வி கேளுங்க வாழ்க்கை சுவாரஸ்யமா இருக்கும். கேள்வி கேளுங்க நாம் நிறைய தெரிஞ்சிக்கலாம். கேள்வி கேளுங்க நம்மலும் கற்பனை திறன் மிக்க ஆளுமையா உருவாகலாம்.
- கட்டுரையாளர்: 8-ம் வகுப்பு, அ பிரிவு, எஸ்.ஆர்.வி. சீனியர் செகண்டரி பப்ளிக் ஸ்கூல், திருச்சி.