

கணிதம் என்றால் என்ன? கணிதம் என்பது இயற்கணிதம், கூட்டல், பெருக்கல், கழித்தல், வகுத்தல் அல்ல. கணிதம் என்பது அறிவின் ஒரு பகுதியாகும். புரிதல் என்பதுதான் கணிதம். கணிதம் கடினமாக உள்ளதா? ஏன் என்று யோசித்து இருக்கிறீர்களா?
கணிதத்தை எளியதாக காண
கணிதம் என்பது பல மாணவர்களால் கடினமான பாடங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. இருப்பினும், பலர் அதிக மதிப்பெண் பெறக் கூடிய பாடமாகவும் கருதுகின்றனர். நீங்கள் கருத்தை புரிந்து கொண்டவுடன் மற்ற தொகைகளை (Sums) செய்வது மிகவும் எளிதாக இருக்கும். நீங்கள் ஒரு முறை கணிதத்தை கடினமான பாடமாக கண்டால் உங்கள் மனதில் "கணிதம் மிகவும் கடினமான பாடம்" என்று ஊடுருவி விடும்.
மாணவர்களை பொருத்த வரை கற்றல் பொதுவாக நிஜ வாழ்க்கையுடன் தொடர்பு படுத்தும் போது எளிதாக இருக்கும். எடுத்துக்காட்டாக பணத்தை நிர்வகித்தல், பயணத்திற்கான தூரம், நேரம், மற்றும் செலவு ஆகியவற்ற கணக்கிட முக்கோணவியல், இயற்கணிதம் மற்றும் பிதோகரஸ் தேற்றம் உள்ளிட்ட கணித கோட்பாடுகள் பயன்படுத்தப்படுகின்றன. இவை நம் வாழ்க்கையிலிருந்து முற்றிலும் சம்பந்தம் இல்லாதது போல் தெரியும். ஆனால் ஒரு கட்டிடம் கட்டுவதற்கு இவை அனைத்தும் அடிப்படை. கோட்பாடு (Theory) மற்றும் சூத்திரங்களை (formulae) புரிந்து கொண்டவுடன் நீங்கள் எந்த வகையான கணக்கையும் செய்ய முடியும். புரிதலற்ற கணிதம் என்றும் பயனளிக்காது.
கட்டுரையாளர், மாணவி, 8-ம் வகுப்பு, அ பிரிவு, எஸ்.ஆர்.வீ.சீனியர் செகண்டரி பப்ளிக் ஸ்கூல், திருச்சி.