பிரேசில் உலகக் கோப்பை பெற காரணமானது பீலேவின் ஜிங்கா ஸ்டைல்

பிரேசில் உலகக் கோப்பை பெற காரணமானது பீலேவின் ஜிங்கா ஸ்டைல்
Updated on
2 min read

வெற்றி தற்செயலானது அல்ல. கடின உழைப்பு, விடாமுயற்சி, கற்றல், படிப்பது, தியாகம் மற்றும் எல்லாவற்றிற்கும் மேலாக நீங்கள் என்ன செய்கிறீர்கள் அல்லது செய்ய கற்றுக் கொள்கிறீர்கள் என்பதில் தான் வெற்றி இருக்கிறது என்று கூறுவார் பீலே.

கால்பந்து உலகம் தவிர்க்க முடியாத வீரர் பிரேசில் நாட்டை சேர்ந்த பீலே. பீலேவிற்கு பிறகு தான் பட்டியலிட வேண்டும் மரோடானா, மெஸ்ஸி, ரொனால்டோ, எம்பாப்பே போன்ற வீரர்களை. ஓய்வு நேரங்களில் நண்பர்களோடு ஷூவிற்காக போடும் காலுறைகளில் துணிகளை அடைத்து அதை கால்பந்தாக மாற்றி விளையாடியதே பீலேவின் முதல் கால்பந்தாட்ட விளையாட்டு. 2016-ல் பீலே-பர்த் ஆஃப் எலெஜன்ட் (Pele-Birth of a legend) என்ற பெயரில் இவரின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக வெளிவந்தது.

உலகக் கோப்பை 1950-ல் உருகுவேயை எதிர்த்து பிரேசில் விளையாடும் போது 2-1 என்ற கணக்கில் உருகுவேயை வென்றது. பிரேசில் தோல்வியை கண்டு கண் கலங்கினார் பீலேவின் தந்தை. இவர் தன் தந்தையிடம் பிரேசில் உலகக் கோப்பை வெல்லும் என்று சத்தியம் செய்தார். பீலேவின் தந்தை கால்பந்து வீரராக இருந்து பின் உடல்நலக் குறைவால் கழிப்பறை சுத்தம் செய்யும் தொழில் புரிந்தார். இது பீலெவின் மனதை பெரிதும் பாதித்தது. பீலேவின் தந்தை கால்பந்து விளையாடியதால் தான் இந்த நிலை என்று பீலேவின் தாய் பீலேவை விளையாட அனுமதிக்கவில்லை.

ஆனால் பீலேவின் ஆசை கால்பந்தாட்டம் மீதே இருந்தது. தனது சிறுவயதில் நண்பர்களோடு உள்ளூர் கால்பந்து போட்டியில் கலந்து கொண்டார். அப்போது கிழிந்த சட்டை அணிந்தும், ஷூ அணியாமலும் விளையாடினர். எதிர் அணியினர் இவர்களை கேலி செய்தனர் ஷூ லெஸ் ஒன்ஸ் (shoe less one’s). இதை கண்ட பீலே தலையணை உறைகளை தனது குழுவினரின் சட்டைகளாக மாற்றினார். வேர்கடலை மூட்டையை திருடி அதில் கிடைத்த பணத்தை வைத்து பயன்படுத்தப்பட்ட ஷூக்களை விலைக்கு வாங்கி அணிந்து அடுத்த போட்டிக்கு தயாரானது அந்த குழு.

பீலேவின் ஜிங்கா ஸ்டைல்

ஆப்ரிக்காவில் இருந்த கருப்பின அடிமை மக்கள் பிரேசில் வரும்போது அடிமைத்தனத்தை அழிக்க கற்றுக்கொண்ட கலைதான் ஜிங்கா. தலை, மார்பு, தொடை, கால் என பந்தை வைத்து விளையாடி எதிர் அணியினர் அசந்து பார்க்கும் படி விளையாடுவார். தலைகீழாக சுழன்று கால்பந்தில் வித்தைகாட்டி விளையாடுவது தான் பீலேவின் ஜிங்கா ஸ்டைல். இந்த ஜிங்கா ஸ்டைல் கொண்டே பிரேசில் முதன் முறையாக உலகக் கோப்பையை கைப்பற்றியது.

சிறுவயதில் இருந்தே நிராகரிப்பையும், கிண்டல்களையும், ஏழ்மையையும் சந்தித்தார் பீலே. விளையாட்டில் பயன்படுத்துகின்ற டெக்னிக்கை தவறு என்றுகோச் திட்டிய போதும் இவர் தனது ஜிங்கா ஸ்டைல் டெக்னிக்கை மாற்றிக் கொள்ளவில்லை. கற்றுக் கொண்ட ஸ்டைலை சிறப்பாக விளையாடினார்.

பீலேவின் வாழ்க்கை வாழ்கின்ற அனைவருக்கும் சொல்லும் முக்கிய செய்தி. வளர்ச்சிக்கு யாரும் தடை இல்லை. வறுமையை விரட்ட திறமை போதும் என்பது தான்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in