

திருநெல்வேலி: நெல்லை பாளையங் கோட்டையில் உள்ள பிளாரன்ஸ் சுவேன்சன் காதுகேளாதோர் மேல்நிலைப் பள்ளியில் தேசிய மாசுக்கட்டுப்பாடு தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவ, மாணவியருக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன.
தேசிய பசுமைப்படை, பள்ளியின் பசுமைப்படை மற்றும் பள்ளி தலைமையாசிரியர் டி. ஜான்சன், தாளாளர் ஆர்.கே. ஜேக்கப் ஆகியோர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்தனர். திருநெல்வேலி மாநகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவியர் இந்த போட்டிகளில் பங்கேற்றனர். ‘நெகிழி இல்லா நெல்லை’ என்ற தலைப்பில் பேச்சுப் போட்டியும், ‘மாசுக்கட்டுப்பாட்டில் நம் பங்கு’ என்ற தலைப்பில் கட்டுரைப் போட்டியும், ‘புவியைக் காப்போம்’ என்ற தலைப்பில் ஓவியப் போட்டியும் நடத்தப்பட்டன.