

ஆப்பிள் பழத்தை எடுத்து கடிக்கப் போன தமிழினி ஓடிப் போய் தெருவைப் பார்த்தாள். அவள் அண்ணாவோ உள்ளே வந்து சாப்பிடு. இது என்ன பழக்கம் என்றான்.
இல்லை அண்ணா என் தோழி நேற்று பழங்கள் எல்லாம் அட்டைப் படத்தில் பார்த்ததோடு சரி. நான் சாப்பிட்டதே இல்லை என்று ஏக்கத்தோடு சொன்னாள். நம் அப்பா நேற்று ஆப்பிள் பழம் வாங்கி வந்தது எனக்கு நினைவு வந்தது. அதனால் வீட்டுக்கு வர சொல்லி இருந்தேன். அதான் வருகிறாளா? என்று பார்க்கிறேன். வா, வா வந்தால் வீட்டுக்குள் வருவாள் என்று சொல்லிவிட்டு, சிலர் வீட்டுக்கு வந்தாலே மறைத்து வைத்து உண்பார்கள். நீயோ தேடி தேடி கொடுக்கிறாய்? என்று அலுத்துக் கொள்கிறான்.
ஏன் அண்ணா அப்படி சொல்கிறாய்? நம் அம்மா யார் வந்தாலும் அவர்களுக்கு கொடுத்துவிட்டு தானே உண்பார்கள். அவங்க வளர்த்த பிள்ளைகளாச்சே கொடுத்து தான் சாப்பிடனும். ஆமாம் நீ பெரிய வள்ளல் பரம்பரை போடி, போய் படிக்கிற வேலையைப் பார் என்றான் அதட்டலாக. நம் வீட்டுக்கு இன்னைக்கு விருந்தினர் வராங்க அவங்களுக்காக அம்மா பிரியாணி செய்து வச்சிருக்காங்க. அதையாவது கொடுத்து பழகு என்று சொன்னாள்.
திருந்தவே மாட்டாய்: நீ வேண்டுமானால் ஆப்பிள் கொடுப்பதோடு நிறுத்திக்கொள். என் வழிக்கு வராதே என்றான். எங்க ஆசிரியர்விருந்தினர் வெளியே இருக்கும்போது நாம் மட்டும் உண்ணக்கூடாது என்று சொல்லி இருக்காங்க தெரியுமா? நீ தான் நல்ல பிள்ளையாச்சே அவங்க சொல்படி நடத்துக்கோ என்று தர்க்கம் செய்தான். நீ திருந்தவே மாட்டாய் என்னவோ உன் இஷ்டம் போல் நட என்றான்.
மறுநாள் தமிழினி அண்ணன் அவனோட நண்பன் மாதவன் வீட்டுக்கு போனான். நெய் வாசம் மூக்கை துளைக்க என்னடா மாதவா ஸ்பெசல் என்று கேட்கிறான். என் தங்கைக்கு பிறந்தநாள் அதான் எங்க அம்மா கேசரி செய்கிறார்கள் உனக்கும் தருகிறேன். உன்னை மட்டும் வெளியில் அமர்த்திவிட்டு உண்ணும் வழக்கம் இல்லை. அவனுக்கோ ஓங்கி ஒரு அரை விட்டது போல் இருந்தது. இதைத் தான் வள்ளுவர்
விருந்து புறந்ததா தானுண்டல் சாவா
மருந்தெனினும் வேண்டற்பாற்று அன்று. - குறள் 82
என்கிறார்.
கட்டுரையாளர்: பள்ளி ஆசிரியர்