Published : 08 Nov 2022 06:13 AM
Last Updated : 08 Nov 2022 06:13 AM
பல ஆண்டுகள் பின்நோக்கிப் பார்த்தால் அதுமிகவும் அற்புதமான காலம் என்றுதான் சொல்லுவேன். எங்கோ இருக்கும் அத்தை, மாமா, அண்ணா நம்மை விசாரிக்க வேண்டும் என்றால் கடிதத்தின் வழியாகவேதான் நம்மை வந்தடைவார்கள். அன்று இருந்த பாசம், நேசம் இன்று உள்ளதா என்றால் கண்டிப்பாக இல்லை. மாதத்திற்கு ஒரு கடிதம் வரும். வீட்டில் உள்ள அனைவரும் ஒன்றாக அமர்ந்திருக்க அப்பா அதை வாசிப்பார். நலம், நலமறிய ஆவல் என தொடங்கும் கடிதத்தில் இடம்பெற்றிருக்கும் உறவுகள், கடிதம் வழியே நம் கண் முன் வருவார்கள். அது கற்பனையாக இருந்தாலும் அது தரும் ஆனந்தமே தனிதான்.
ஆட்கொண்ட அழைப்பு மணி: இன்று அப்படி அல்ல. கைபேசி நம்மை ஆட்கொண்டுவிட்டது. வாட்சப் என்ற செயலிமூலம் பேசிக் கொள்கிறோம். ஹாய்! என்ற வார்த்தை தான். சில நேரம் அதுவும் கூட இல்லை கடிதாசிக்கு காத்திருந்த காலம்போய், கைபேசி அழைப்பு மணிக்காக காத்திருக்கும் நிலை வந்துவிட்டது. கடிதாசி கொடுத்த மகிழ்ச்சியை கைபேசி அழைப்பு தருகிறதா என்பதை அவரவர் முடிவுக்கே விட்டுவிடுகிறேன்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT