தனியார் பள்ளிகளைப் போல அரசு பள்ளிக்கு குழந்தைகள் சென்று வர வாகனம்: உதகை அருகே கிராம மக்கள் அசத்தல்

நஞ்சநாடு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி குழந்தைகளுக்காக கிராம மக்கள் சொந்த நிதியில் வாங்கிக் கொடுத்துள்ள வேன்.
நஞ்சநாடு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி குழந்தைகளுக்காக கிராம மக்கள் சொந்த நிதியில் வாங்கிக் கொடுத்துள்ள வேன்.
Updated on
1 min read

உதகை: தனியார் பள்ளிகளைப் போல அரசு தொடக்கப் பள்ளிக்கு குழந்தைகளை அழைத்துவர உதகை அருகே கிராம மக்கள் தங்கள் சொந்த பணத்தில் புதிய வாகனத்தை வாங்கிக் கொடுத் துள்ளனர்.

நீலகிரி மாவட்டம் உதகை அருகே உள்ளது நஞ்சநாடு. தமிழகத்தில் முதன்முறையாக இங்குள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் குழந்தைகளை அழைத்து வர ‘ஸ்கூல் பஸ்’வாங்கி கிராம மக்கள் சாதனை படைத்துள்ளனர். இதனால் மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளது. கிராம மக்கள் சேர்ந்து ‘ஸ்ரீ நஞ்சுண்டேஸ்வர கல்வி அறக்கட்டளை’ என்ற புதிய அமைப்பை தொடங்கி அதன் வாயிலாக பள்ளிக்கு பல்வேறு மேம்பாட்டு பணிகளை செய்து வருகின்றனர்.

இதுகுறித்து அறக்கட்டளையின் நிர்வாகி ரவிக்குமார் கூறியதாவது: கடந்த 1922-ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த பள்ளியில் கரோனா காலத்தில் வெறும் 17 மாணவர்கள், ஓர் ஆசிரியர் மட்டுமே இருந்தனர். போதிய ஆசிரியர்கள் இல்லாததால் பெற்றோர் யாரும் தங்களது குழந்தைகளை சேர்க்க முன்வரவில்லை. 100 ஆண்டு பழமை வாய்ந்த இந்த பள்ளியை மூடிவிடக்கூடாது என்பதால் அறக்கட்டளை ஒன்றை தொடங்கி நிதி திரட்டி, அதன் மூலம் பள்ளி அறைகளை புதுப்பித்து கழிப்பிடம் கட்டிக்கொடுத்தோம். இதனால், மாணவர் சேர்க்கை அதிகரித்தது.

பெற்றோர் ஆசிரியர் கழகம் சார்பில் புதிதாக 2 ஆசிரியர்களை நியமித்து பாடங்களை சிறப்பாக நடத்தினோம். இருப்பினும் கிராமப்பகுதி சிறுவர்கள் பள்ளிக்கு வர போக்குவரத்து வசதி கிடையாது. இதனால், வேன் வாங்க முடிவு செய்து, ரூ.8 லட்சம் நிதி திரட்டிஅதையும் வாங்கினோம். இதனால் பக்கத்து கிராமங்களான பாகலட்டி, கோழிக்கரை, பாலாடா, கல்லக்கொரையிலிருந்து மாணவர்கள் வர ஆரம்பித்தனர். இப்போது பள்ளியில் 170 மாணவர்கள் பயில்கின்றனர். பள்ளியின் தரத்தைஇன்னும் உயர்த்தி மாணவர்கள் எண்ணிக்கையை அதிகரித்து தமிழகத்திலேயே சிறந்த அரசு பள்ளியாக இதை மாற்ற வேண்டும் என்பது எங்களது லட்சியம். இவ்வாறு ரவிக்குமார் கூறினார். ஒவ்வொன்றுக்கும் நாம் அரசையே நம்பியிருக்காமல் பொதுமக்களும் தங்களது பங்களிப்பை அளித்தால் தமிழகத்தில் எல்லா அரசு பள்ளிகளும் சிறந்த பள்ளிகளாக மாறும் என்பதற்கு நஞ்சநாடு பள்ளி ஒரு சிறந்த உதாரணம்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in