

புலி புத்திசாலித்தனமும் வலிமையும் மிகுந்தது, விரைவாக ஓடக்கூடியது. இதனால், மற்ற விலங்குகளை, குறிப்பாக, மெலிந்த வண்டு மற்றும் மெல்ல அடியெடுத்து நடக்கும் யானையை எப்போதும் கேலி செய்தது. ஒருநாள், எல்லா விலங்குகளும் ஒரு குகையில் கூட்டம் நடத்தின. அந்நேரத்தில் ஏற்பட்ட நிலச்சரிவு குகையின் வாசலை மூடி மறைத்தது. புலி தங்களைக் காப்பாற்றும் என்று விலங்குகள் ஒவ்வொன்றும் எதிர்பார்த்தன. ஆனால், புலியால் காப்பாற்ற இயலவில்லை.
கடைசியில், பாறைகளுக்கு இடையில் இருந்த மிகச் சிறிய ஓட்டை வழியாக வண்டு தப்பித்தது. வருத்தமாக இருந்ததால், கூட்டத்துக்கு வராத யானையைத் தேடிச் சென்றது. யானை வந்து, பாறைகளை அகற்றி அனைத்து விலங்குகளையும் காப்பாற்றியது. யானையையும், வண்டையும் எல்லா விலங்குகளும் பாராட்டின. மேலும், அவைகளின் நண்பர்களாவதற்கும் ஆர்வம் காட்டின. கடைசியாக குகையை விட்டு வெளியேறிய விலங்கு யாதெனில், அது அவமானத்துடன் வெளியேறிய புலிதான்! புலி பாடம் கற்றுக்கொண்டது. அந்த நாளில் இருந்து, மற்ற எல்லா விலங்குகளிடமும் உள்ள நல்லவைகளை மட்டுமே அது பார்த்தது.
தமிழில்: சூ.ம.ஜெயசீலன்
தொடர்புக்கு: sumajeyaseelan@gmail.com