

வாழ்வது சிறிது காலம் என்பது பலருக்கு புரிவது இல்லை. எதிர்பார்ப்பு கூடும்போது நம் வாழ்க்கையை நாம் இழக்கிறோம். பணம் தேவைதான். ஆனால் பணமே வாழ்க்கை இல்லை. வாழும் வாழ்க்கையை அழகானதாக மாற்றித்தரும் நம் மனப்பக்குவமும், எதார்த்தமாக வாழும் வாழ்க்கையைப் புரிந்து கொண்டாலே போதுமானது. நாம் இனிதே வாழ்க்கையை வாழ கற்றுக் கொள்ள முடியும்.
இந்த உலகம் பல அற்புத மான இயற்கை அழகை கொண் டுள்ளது. எத்தனை பேர் அதன் அழகைக் கண்டு ஆச்சரியமும், சந்தோஷமும் கொண்டு வாழ்ந்து கொண்டு இருக்கிறோம்? இயற்கை எவ்வளவு அழகானதோ, அதைப்போல் சிலரின் வாழ்க்கையும் மிக அழகானதாக இருக்கிறது. எதார்த்தத்தை புரிந்து கொண்டு வாழும்வரை இயற்கை பல வண்ணங்கள் நிறைந்தது என்பதை மனம்உணரும். ஒவ்வொரு வண்ணத்திற்கும் ஒரு அர்த்தம் உண்டு. அதே போல் அனைவரின் வாழ்க்கைக்கும் ஒரு அர்த்தம் இருக்கிறது.
ஒரு சில காரியங்களை செய்கையில் ஒருவர் எதிர்பார்ப்பு, லாப நோக்கங்கள், வெறுப்பு, தீய எண்ணம் இல்லாமல் செய்வார் எனில், அந்த தருணத்தில் அந்த மனிதருக்கு உண்மையான மகிழ்ச்சி அவர் மனதில் ஏற்படும். நமக்கான வாழ்க்கையை நாம்தான் வாழ வேண்டும். நமது வாழ்க்கையை நாம் வாழ தொடங்கினாலே வாழ்க்கை மிக அற்புதமாகும். இந்த பிரபஞ்சத்தில் ஒவ்வொரு உயிரும் மிக அற்புதமானதே, அதிலும் மிக அரிதானது மனிதனுக்குத்தான் உருவாக்கவும் அழிக்கவும் தெரியும். இயற்கையுடன் இணைந்து வாழ்வதே எதார்த்தமான மகிழ்ச்சியான வாழ்க்கை ஆகும். அதை வாழ்ந்து பார்க்கலாமே...
கட்டுரையாளர்
ஆசிரியை
பல்லோட்டி மேல்நிலைப்பள்ளி,
நாகமலை, மதுரை மாவட்டம்.