Published : 14 Sep 2022 06:10 AM
Last Updated : 14 Sep 2022 06:10 AM

என்ன படிக்க வேண்டும், கல்வி நிறுவனத்தை தேர்ந்தெடுப்பது எப்படி? - உங்கள் விருப்பத்தை பின்தொடருங்கள்

ஆல்பர்ட் பி' ராயன், அமர்நாத்

பொறியியல் படிப்புகளுக்கான சேர்க்கைக் காலம்தொடங்கி இருக்கிறது. அதற்காக மாணவர் களின் தர வரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில், 1.58 லட்சம் மாணவர்கள் உள்ளனர்.

ஆயிரக்கணக்கான மாணவர்கள் ஏற்கெனவே பல்வேறு தனியார் பொறியியல் கல்லூரிகளிலும், நிகர்நிலைப் பல்கலைக் கழகங்களிலும் ஏற்கனவே சேர்ந்துவிட்டனர்.

இதுதொடர்பாக மாணவர்கள், பெற்றோருடன் கலந்துரையாடியபோது, பொறியியல் கல்லூரிகளின்

பகட்டான விளம்பரங்களால் அவர்கள் ஈர்க்கப்பட்டுள்ளனர் என்பது தெரியவந்தது. துரதிர்ஷ்டவசமாக, அதிகம் படித்த பெற்றோர்கூட விளம்பரங்களை ஆய்ந்து அறியும் ஆற்றல் இல்லாதவர்களாக இருக்கின்றனர்.

சில தனியார் கல்வி நிறுவனங்கள் தங்கள்சீட்களை விற்க விளம்பரங்களுக்கு கோடிக்கணக் கில் செலவிடுகின்றன. அத்தகைய விளம்பரங்கள் வெறும் தகவல்கள் மட்டுமின்றி, விருதுகள்,தரச்சான்று, தரவரிசை, வளாகத் தேர்வு பணியமர்வு உள்ளிட்ட பல பொய்யான தகவல்களைக் கொண்டுள்ளன.

இது, பெற்றோரை தவறாக வழிநடத்துகிறது. அதனால், அவர்கள் தங்கள் குழந்தைகளுக்கு ‘புகழ்பெற்ற' அல்லது ‘முதன்மையான' கல்வி நிறுவனங்கள் என கருதி சேர்க்கையைஉறுதி செய்வதுடன், சில கல்வி தொழில்முனை வோர்களின் வணிகச் செயல்பாடுகளுக்கும் இரையாகி விடுகின்றனர்.

சரியான பாடப்பிரிவையும், சரியான கல்வி நிறுவனத்தையும் தேர்ந்தெடுத்தல் என்பது மாணவர்கள் எடுக்க வேண்டிய மிக முக்கியமான முடிவாகும்.

பொதுவாக, பெற்றோரும் மற்றவர்களும் கொடுக்கும் அழுத்தத்தினால், பல மாணவர்கள் தவறான முடிவுகளையே எடுக்கின்றனர். குறிப்பிட்ட பாடப்பிரிவைப் படிக்க விரும்புவர்கள், எதை, எங்கே படிக்க வேண்டும் என தீர்மானிக்கும் முன்பு,தங்களுக்கு உண்மையிலேயே அத்துறையில் ஆர்வம் இருக்கிறதா என்பதைச் சரிபார்க்க வேண்டும்.

அதற்கு மாணவர்கள் கீழ்க்கண்ட கேள்வி களுக்கு விடைகாண வேண்டும்.

l எனது கல்விசார் ஆர்வம் என்னென்ன?

l நான் உண்மையிலேயே குறிப்பிட்ட பாடப்பிரிவில் (எடுத்துக்காட்டாக இயந்திரப் பொறியியல்) ஆர்வமாக இருக்கிறேனா?

l அதில் நான் ஆர்வமாக இருக்கிறேனா என்பதை எவ்வாறு நான் அறிவது?

l நான் ஏன் அதில் ஆர்வமாக உள்ளேன்?

l இத்துறையில், இப்படிப்பில், இப்பாடப்பிரிவில் பட்டம் பெறுபவர்களுக்கு எதிர்கால வேலைவாய்ப்புகள் என்ன?

l எனது விருப்பம் குறித்து வல்லுநர்களிடமோ, இத்துறையில் பணிபுரிபவர்களிடமோ நான் விவாதித்திருக்கிறேனா?

l எனது கல்விசார் பலம் மற்றும் பலவீனங்கள் என்னென்ன?

l குறிப்பிட்ட பாடப்பிரிவு குறித்த அடிப்படை அறிவு உள்ளதா?

l நான் ஏன் இப்பாடப்பிரிவை விரும்புகிறேன்? என் எதிர்கால இலக்குகள் என்ன? என மற்றவர்கள் புரிந்து கொள்ளும்படி சொல்லும் திறன் இருக்கிறதா?

l பெரும்பாலான மாணவர்கள் "Follow yourpassion (உங்கள் விருப்பத்தைப் பின்தொடருங்கள்) என்ற மூன்றெழுத்து மந்திரத்தை நன்கு அறிந்துள்ளனர். இன்று, பல மாணவர்கள் தங்களது ஆர்வத்தை ஆராய்ந்து, மதிப்பீடு செய்வதுடன், அதற்கு பெற்றோரை சம்மதிக்க வைக்கும் திறனுடையவர்களாகவும், சுயமாக முடிவு எடுப்பவர்களாகவும் உள்ளனர். சரியான பாடப்பிரிவைத் தேர்வு செய்தபின், சரியான கல்வி நிறுவனத்தைத் தேர்வு செய்வது அவசியம். இதனைச் செய்வதற்கு மாணவர்கள் பின்வரும் கேள்விகளுக்கு விடையளிக்கும் திறன் கொண்டவர்களாக இருக்க வேண்டும்.

l எனக்கான சரியான கல்லூரி, பல்கலைக்கழகம் எது?

l அந்தக் கல்வி நிறுவனத்தைப் பற்றி எனக்கு என்ன தெரியும்?

l அந்தத் துறையில் தகுதிவாய்ந்த, அனுபவமிக்க மற்றும் புகழ்பெற்ற ஆசிரியர்கள் குழு உள்ளதா?

l மற்றவர்கள் அந்தக் கல்லூரியை எப்படி கருதுகிறார்கள்?

l அந்தக் கல்லூரி அல்லது பல்கலைக்கழகத்தை எதன் அடிப்படையில் நான் தேர்வு செய் திருக்கிறேன்?

இவ்வாறு தங்களது விருப்பத்தைக் கண்டறிந்த வர்கள் அதனை கண்டிப்பாக பின்தொடர்வதும், மதிப்பிடுவதும் அவசியம். இதுவே, அவர்கள் சரியான பாதையில் தொடர்ந்து செல்ல ஊக்கமளிக்கும்.

கட்டுரையாளர்கள்

முனைவர் ஆல்பர்ட் பி'ராயன், கல்வியாளர், rayanal@yahoo.co.uk

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x