மொழிபெயர்ப்புச் சிறுகதை: வண்ணம் இழந்த புலி

மொழிபெயர்ப்புச் சிறுகதை: வண்ணம் இழந்த புலி
Updated on
1 min read

ஒருகாலத்தில், வண்ணம் இழந்த புலி ஒன்று வாழ்ந்தது. அதன் உடலில் இருந்ததெல்லாம் கருப்பு, சாம்பல் மற்றும் வெள்ளை நிறங்கள் மட்டும்தான். எந்தளவுக்கு என்றால், அந்தக் காலத்து கருப்பு வெள்ளை திரைப்படம் போல இருந்தது.

வண்ணம் இல்லாதது அந்த புலியை இன்னும் பிரபலமாக்கியது. புலியைப் பார்த்தவர்கள், “அட! வண்ணமே இல்லாமல் ஒரு புலி இருக்கிறதே!” என்று வியந்தார்கள்.

உலகில் உள்ள புகழ்பெற்ற ஓவியர்களெல்லாம் மிருகக் காட்சி சாலைக்குவந்தார்கள். புலியின் உடலில் வண்ணம் பூச முயன்றார்கள். யாராலுமே எதுவும் செய்ய இயலவில்லை. அதன்தோலில் பூசிய வண்ணங்கள் அனைத்தும் சொட்டுச் சொட்டாக வடிந்துவிடுவது வழக்கமாக இருந்தது.

ஒருநாள், பைத்தியக்காரர் போலதோற்றம் அளித்த வான் காஃவ் வந்தார். அவர் ஒரு விசித்திர மனிதர். தன் தூரிகையால் மகிழ்ச்சியாக படம் வரைந்துகொண்டு வீதிகளில் அலைந்துதிரிந்தார். வரைவதற்கு, வண்ணம்,துணி அல்லதுதாள் எதுவுமே அவர்பயன்படுத்தியதில்லை. எப்போதுமே, காற்றில் வரைந்து கொண்டிப்பார். எல்லாரும் அவரை வான் காஃப் (Van Cough) என்று அழைத்தார்கள். (புகழ்பெற்ற ஓவியர் Van Gogh அவர்களின் பெயரைச் சொல்லி இவரைக் கேலி செய்வதாக நினைத்து).

“வண்ணம் இழந்த புலிக்கு நான் வண்ணம் பூசுகிறேன்” என்றுவான் காஃவ் சொன்னதும் எல்லாரும் வயிறு வலிக்கச் சிரித்தார்கள். புலியின் கூண்டுக்குள் ஓவியர் நுழைந்தார். புலியின் காதில் ஏதோ கிசுகிசுத்தார். தன்தூரிகையை, புலியின் உடலில்சும்மா மேலும் கீழுமாக தடவினார்.எல்லாரும் ஆச்சர்யப்படும் அளவுக்கு, புலியின் தோலில் நிறங்கள் தெரிய ஆரம்பித்தன. எல்லா புலிகளுக்கும் இருக்கின்ற வண்ணங்கள் இந்தப் புலியின் தோலிலும் பளிச்சிட்டன.

விலங்கின் காதில் கிசுகிசுப்பதும், வண்ணம் பூசுவதில்சில மாறுதல்கள் செய்வதுமாக அதிக நேரம் செலவு செய்தார் வான் காஃப். செய்து முடித்தபோது, புலி உண்மையிலேயே அழகாய் இருந்தது.

நடந்ததைப் பார்த்துக்கொண்டிருந்த ஒவ்வொருவரும், “அட! என்னே அழகான புலியாக இது மாறிவிட்டது” என்றார்கள். ஓவியரிடம் உள்ள ரகசியத்தை அறிய எல்லாரும்விரும்பினார்கள்.

அவர்களிடம், “இந்த தூரிகை, உண்மையான வாழ்க்கையை மட்டுமே வரையும். இதற்கு வண்ணங்கள் ஏதும் தேவையில்லை. புலியைச் சமாளிப்பதற்காக, வரையும்போது அதன் காதுகளுக்கு அருகில் சென்று, ‘நீ வேண்டுமானால் பார்! இன்னும் சில நாட்களில் மறுபடியும் உனக்கு சுதந்திரம் கிடைக்கப் போகிறது’ என்று சொன்னேன்” என்றார்.

இத்தனை காலமாக, மிருகக்காட்சி சாலையில் புலிஎவ்வளவு சோகமாக இருந்துள்ளது என்பதை மிருகக்காட்சி அதிகாரிகள் புரிந்துகொண்டார்கள். சுதந்திரம் கிடைக்கப் போகிறது என்னும் நம்பிக்கையில், புலி மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதுபோல் தோன்றியது.

அதிகாரிகள் புலியை காட்டுக்கு எடுத்துச் சென்றார்கள். அதை சுதந்திரமாக போக விட்டார்கள். மகிழ்ச்சியோடு சென்ற புலி, “இனி ஒரு போதும்நான் என் நிறத்தை இழக்கவே மாட்டன்” என்று சொல்லிக்கொண்டது.

தமிழில்: சூ.ம.ஜெயசீலன்

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in