

எங்கள் பள்ளிக்கு புதுடெல்லி விஞ்ஞான் பிரசார் மூத்த அறிவியல் அறிஞர் த.வி.வெங்கடேஸ்வரன் வந்திருந்தார். ஜேம்ஸ்வெப் விண்வெளி தொலைநோக்கி பற்றி எங்களிடம் பேசினார். அவர் கூறிய செய்திகள் விண்வெளி குறித்த பல உண்மைகளை எங்களிடம் கொண்டுவந்து சேர்த்தது. இப்பொழுதெல்லாம் வானத்தைப் பார்க்கும் போது அறிவியல் விந்தைகளை எண்ணி அதிசயிக்கிறேன்.
அறிவியல் அறிஞர் த.வி.வெங்கடேஸ்வரன் ஜேம்ஸ்வெப் விண்வெளி தொலைநோக்கி குறித்து பேசியதிலிருந்து நான் கற்றுக் கொண்ட வற்றை எல்லோரிடமும் பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன்.
l சூரியனும் பிற கோள்களும் பூமியைச் சுற்றி வருகிறது என்று புவி மையக் கோட்பாடு (GEOCENTRIC THEORY) கூறியது. ஆனால், புவி மையக் கோட்பாடு தவறு என்று விஞ்ஞானி கலிலியோ நிரூபித்தார்.
l ஹப்பிள் விண்வெளி தொலைநோக்கியைத் (Hubble telescope) தொடர்ந்து ஜேம்ஸ் வெப் விண்வெளி (James Webb) தொலைநோக்கி யின் வாயிலாக, கடந்த காலத்தின் நட்சத்திரங்களை நாம் பார்க்க முடியும்.
l மனிதர்களுக்கு மட்டும் பிறப்பு இறப்பு இல்லை. விண்மீன்கள், கோள்கள் போன்றவையும் பலகாலம் வாழ்ந்தால் இறக்கும் என்பது தெரியவந்ததும் அதிசயமாக இருந்தது.
l ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியின் வாயிலாகப் பேரண்டம் தோன்றிய ஆதிகாலத்து விண்மீன்கள், சூரியமண்டலத்திற்கு அப்பால் உள்ள மேகம் போன்று தோற்றம் அளிக்கும் விண்மீன் கூட்டங்கள் (nebule), வியாழன் மற்றும் சூரியக்குடும்பத்தின் தொலைதூரம் உள்ள கோள்களையும் பார்க்க முடியும்.
l ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியால் பிரபஞ்சத் தின் கடந்த காலத்தை காணலாம். இன்னும் ஆழமாக சொல்வதானால் ஆதியில் பிரபஞ்சம் தோன்றிய காலத்தைப் பார்க்க முடியும்.
l பல லட்சத்திற்கும் மேற்பட்ட பொருட்கள் சூரியனைச் சுற்றி வருகிறது. அதில் பெரிதாக இருக்கும் பொருட்களை நாம் கோள்கள் என்று அழைக்கிறோம்.
பூமியில் இருந்து வெகுதொலைவில் உள்ளஅனைத்து பொருட்களை யும், ஒளியின் உதவியால் அவை எவ்வளவு தூரம் உள்ளன என்பதை அறிந்துகொள்ளலாம்.
இந்தப் பேரண்டத்தை முழுவதுமாகப் பார்க்க, நமக்கு மொத்தம் 2,50,000 புகைப்படங்கள் தேவை. ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி, தற்போது நமக்கு பேரண்டத்தின் ஒரு சிறுபகுதியை மட்டுமே புகைப்படமாக எடுத்து அனுப்பியுள்ளது.
l ஒரு விண்மீனின் பிறப்பு, அணுக்கரு இணைவால் (Nuclear fusion) ஏற்படுகிறது. வெப்ப அணுக்கரு வினை (Thermonuclear reaction) என்பது விண்மீனின் மையக்கருவில் நடக்கும்; இதுவே ஒரு விண்மீனிற்கும் கோள்களுக்கும் உள்ள வித்தியாசம்.
l ஒரு விண்மீனிற்கும் பூமிக்கும் உள்ள தொலைவை கண்டுபிடிக்க, அரைக்கோணம் முறையைப் (half angle method) பயன்படுத்து கிறார்கள்.
l ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி பூமியிலிருந்து 1.5 லட்சம் கிலோமீட்டர் தொலைவில் இருந்து பூமியோடு சேர்ந்து சூரியனை L2 என்னும் இடத்திலிருந்து சுற்றி வருகிறது.
l பிற கோள்களில் உயிர்கள் உள்ளதா என்பதை கண்டுபிடிக்க உயிரிவேதிக்குறியீடு (BIOSIGNATURE) உதவுகிறது.
l WASP 96 என்னும் விண்மீன் பூமியை விட்டு 1150 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளது.
l உயிரிவேதிக்குறியீடு வழியாக இந்தக் கோளில் நீர் குமிழிகள் உள்ளன என்று கண்டுபிடித்துள்ளது.
மொத்தத்தில், பூமி மட்டுமே மனிதனின் தொட்டில்!
இந்த பதிவை எழுதியவர்:பிளஸ் 1 மாணவி, எஸ்.ஆர்.வி. சீனியர் செகன்டரி பப்ளிக் பள்ளி,சமயபுரம், திருச்சி