தினங்கள் சொல்லும் விழிப்புணர்வும், பொது அறிவும்

தினங்கள் சொல்லும் விழிப்புணர்வும், பொது அறிவும்
Updated on
2 min read

பள்ளிகளில் கொண்டாடப்படும் சுதந்திர தினம், குடியரசு தினம், ஆண்டு விழா ஆகியன மட்டுமே கொண்டாட்டம் நிறைந்த விழாக்களாக மாணவர்கள் மனதில் பதிந்திருந்தது.

இன்றைய காலகட்டத்தில் பள்ளிகளில் பல்வேறு மன்றங்கள் ஆரம்பிக்கப்பட்ட பின்பு ஒரு ஆண்டில் இத்தனை தினங்கள் உள்ளதா? என ஆச்சரியத்துடன் மாணவர்கள் பார்க்கின்றனர்.

உலக அளவில், தேசிய அளவில் ஆண்டுதோறும் பல்வேறு தினங்கள் கொண்டாடப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு தினமும் அறிவிக்கப்பட்டதன் பின்னணியில் வரலாறும் உள்நோக்கமும் விழிப்புணர்வும் அடங்கியிருக்கிறது. பல்வேறு முக்கிய தினங்களும் மாணவர்களுக்கு பொதுஅறிவு செய்தியை தாங்கி நிற்கின்றன.

மத்திய, மாநில அரசு பணிகளுக்கான போட்டி தேர்வுகளில் முக்கியமான தினங்கள் குறித்து பல வினாக்கள் தவறாமல் இடம்பெறுகின்றன.

இந்த தினங்கள் ஒவ்வொரு ஆண்டும் எந்த தேதியில் அல்லது எந்த வாரத்தில் வருகிறது என்பதை மாணவர்கள் தேடி அறிந்து கொள்வது அவசியமாகும். ஆண்டின் பெரும்பாலான நாட்களில் முக்கியமான தினங் கள் வருகின்றன.

இவற்றையெல்லாம் ஒவ்வொரு தினங்களாகபள்ளியில் கொண்டாடு வதற்கு நேரம் வாய்ப்பு இருப்பதில்லை.

பாட ஆசிரியர்கள் தாங்கள் பாடத்துடன்தொடர்புடைய தினங்களை பள்ளி வகுப்பறை யில் கற்பிக்கலாம்.

பள்ளி வினாடி - வினாமன்றங்களின் வாயிலாகவும் முக்கியமான தினங்கள் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி பொது அறிவை மேம்படுத் தலாம்.

ஒவ்வொரு தினத்திலும் அடங்கியுள்ள முக்கியமான சாராம்சத்தை பள்ளி காலை வழிபாட்டு கூட்டத்தில் அறிவிக்கலாம். பள்ளியில் தகவல் பலகையில் முக்கிய தினங்கள் சார்ந்த தகவல்களை ஒட்டலாம்.

இந்த மாதத்தில் உள்ள முக்கிய தினங்கள் குறித்து பட்டியல் தயாரித்து ஒவ்வொரு வகுப்பறையிலும் ஒட்டி வைக்கலாம்.

பறவைகளும், விலங்குகளும் என்ற தலைப்பில் மட்டும், மார்ச் 20 சிட்டுக்குருவி, ஏப்ரல் 4 எலிகள், ஏப்ரல் 27 காக்கைகள், மே 20 தேனீக்கள், ஜூலை 16 பாம்புகள், ஜூலை 29 புலிகள், ஆகஸ்டு 8 பூனைகள், ஆகஸ்டு 12 யானைகள், ஆகஸ்டு 20 கொசுக்கள் ஆகஸ்டு 26 நாய்கள், செப்டம்பர் முதல் சனிக்கிழமை கழுகுகள், அக்டோபர் 4 உலக விலங்குகள் நலதினம், டிசம்பர் 3 மயில்கள் தினம். இப்படியான தினங்கள் இருக்கிறது என்பது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்?

முக்கிய தின கொண்டாட்டம்

முக்கிய தினங்கள் கொண்டாடப்படுவதன் நோக்கம், அதன் மூலம் நாம் பெரும் விழிப்புணர்வு, முக்கிய தினங்களில் நாம் எடுத்துக் கொள்ளும் உறுதிமொழி என்ன, இப்புவியை காப்பதில் நமது பங்கு என்ன? எந்த மாதிரியான தியாகத்தை நாம் இந்த புவிக்கு செய்து காக்க வேண்டும், எப்போது இருந்து இந்த தினங்கள் பிறந்தது? இதன் பின்னணியில் இருக்கக்கூடிய தகவல்களை விரிவான முறையில் மாணவர்கள் பள்ளி பருவத்திலே அறிந்து கொள்ள வேண்டும்.

ஒவ்வொரு நாளும் முக்கிய தினங்கள் மட்டுமின்றி முக்கிய தலைவர்கள், அரசியல்வாதிகள், விளையாட்டு வீரர்கள், சாதனை யாளர்கள், எழுத்தாளர்கள், விஞ்ஞானிகள், தத்துவ மேதைகள், போராளிகள், கவிஞர்கள், போராட்ட வீரர்கள், பிறந்த மறைந்த நாட்களும், வரலாற்றுடன் தொடர்புடைய நிகழ்வுகளும் ஒவ்வொரு தினத்திலும் கலந்தே இருக்கிறது. இதையும் மாணவர்கள் அறிந்து கொள்வதில் ஆர்வம் காட்ட வேண்டும்.

ஒவ்வொரு தினத்துக்குள்ளும் அடங்கி இருக் கும் சிறப்புகளை நாம் தேடிப் படித்து தெளிவு பெறுவோம். பொது அறிவில் மேம்பட்டு நிற்போம். போட்டி தேர்வுகளில் வெல்வோம், பள்ளி வினாடி வினா மன்றங்களில் ஜொலிப்போம்! நாளைய தினத்தில் அடங்கியுள்ள முக்கிய தகவல்களை தேடத் தொடங்கி விட்டீர்கள்தானே.

கட்டுரையாளர்

அரசு தொடக்கப் பள்ளி ஆசிரியர்.

அய்யம்பாளையம்

ஆத்தூர் ஒன்றியம்

திண்டுக்கல் மாவட்டம்

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in