ஸ்மார்ட் வகுப்பறைகள் வந்தாலும் மவுசு குறையாத திண்டுக்கல் சாக்பீஸ்

ஸ்மார்ட் வகுப்பறைகள் வந்தாலும் மவுசு குறையாத திண்டுக்கல் சாக்பீஸ்
Updated on
1 min read

திண்டுக்கல்: பள்ளி வகுப்பறைகள் நவீனமயமாக்கப்பட்டு படிப்படியாக ஸ்மார்ட் வகுப்புகள் தொடங்கப்பட்டாலும், பெரும்பாலான பள்ளிகளில் கரும்பலகைகளில் சாக்பீஸில் எழுதி கற்பிக்கும் முறைதான் தொடர் கிறது.

சாக்பீஸுக்கான தேவை தொடர்ந்து இருப்பதால் குடிசை தொழி லாக மேற்கொள்ளப்படும் சாக்பீஸ் தயாரிப்புக்கு மவுசு குறையவில்லை.

திண்டுக்கல் நகரில் மட்டும் 10-க்கும்மேற்பட்ட இடங்களில் சாக்பீஸ் தயாரிப்பு குடிசைத் தொழிலாக மேற்கொள்ளப்பட்டு வந்தது. கடந்த 2 ஆண்டுகளில் கரோனாபாதிப்பு காரணமாக பள்ளிகள் மூடப்பட்டு, ஆன்லைன் வகுப்பு கள் நடத்தப்பட்டதால் சாக்பீஸ் தொழிலை நம்பியிருந்த தொழிலாளர்கள் பலர் வேலை இழந்தனர். சிலர் வேறு தொழிலுக்கும் சென்று விட்டனர்.

இந்நிலையில் கரோனா பாதிப்பு குறைந்து மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டதால், சாக்பீஸ் தயாரிப்பு தொழில் புத்துயிர் பெற்றுள்ளது. தற்போது திண்டுக்கல்லில் 5 இடங்களில் சாக்பீஸ் தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது.

இதுகுறித்து சாக்பீஸ் தயாரிக்கும் அசோக் கூறியதாவது:

தற்போது மூலப்பொருட் களின் விலை உயர்ந்துவிட்டது. அதேநேரம் சாக்பீஸ்விலைகளை உயர்த்த முடியவில்லை. திண்டுக்கல்லில் தயாரிக்கப் படும் சாக்பீஸ்கள் மதுரை, கோயம்புத்தூர், கரூர், திருப்பூர் உள்ளிட்ட பல மாவட்டங்களுக்கு விற்பனைக்கு அனுப்பப்படுகிறது.

சாக்பீஸ் மூலப்பொருட்கள் விலை அதிகரிப்பு, தொழிலாளர் ஊதிய உயர்வுஆகியவற்றை கணக்கிட்டால் போதிய லாபம் கிடைக்கவில்லை. முன்பு குடிசைத்தொழிலாக இருந்த சாக்பீஸ் தயாரிப்பு தற்போது குடும்ப தொழிலாக சுருங்கிவிட்டது. இவ்வாறு அசோக் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in