கதை நேரம்: பள்ளிக்கு போன கிளியக்கா

கதை நேரம்: பள்ளிக்கு போன கிளியக்கா
Updated on
2 min read

சக்தி காலையில் எழுந்திருக்கும் போதே "ஐய்யோ...அம்மா" என்று கத்திக்கொண்டே எழுந்தான். வயிற்றை இறுக்கிப்பிடித்துக் கொண்டான். "அம்ம்மா... வலிக்குதே" என்று கூப்பாடு போட்டான். அவ்ளோ தான்.... அன்று பள்ளிக்கு விடுமுறை.

அம்மாவும் அப்பாவும் வேலைக்கு போனதும் வெளியே புறப்பட்டான். தெருமுனையில் காத்திருந்தான் சில்வண்டு. அன்புவின் பட்டப்பெயர் சில்வண்டு. இருவரும் சைக்கிளில் பறந்தனர். ஊரைத்தாண்டி ஒரு காட்டுப் பாதையில் இருந்தது அந்த இரட்டைப் பனைமரம். ஆளுக்கு ஒரு மரத்தில் ஏறினர்.

சில்வண்டால் கொஞ்ச தூரம் கூட ஏறமுடியவில்லை. கால் வழுக்கி கீழே இறங்கி னான். பனை உச்சிக்குப் போன சக்தி ஏமாந்து போனான்.

எப்பவும் இந்த நேரம் இங்க தான் இருக் கும்ன்னு தகரடப்பா சொன்னானே!" என்றான் சில்வண்டு. எழிலரசனின் பட்டப்பெயர் தான் தகரடப்பா. அடுத்து என்ன செய்வது? என்று யோசித்தனர்.

"உங்க தொல்லை தாங்கமாட்டாமல் தான், புகார் சொல்ல பள்ளிக்கூடத்துக்கு போயிருக்கா "எனச் சொன்னாள் மைனாக்கா.

"டேய் மாப்ள மைனா பேசுதுடா". இருவரும் சைக்கிளில் பள்ளி நோக்கி பறந்தனர்.

பள்ளிக்கூட கேட்டின் மேல் வந்து அமர்ந்தாள் கிளியக்கா. "உங்ககிட்ட பேசனும்" என்று சொல்லிக்கொண்டே பறந்து வந்து தலைமை ஆசிரியர் டேபிளில் அமர்ந்தாள். அவர் வாயடைத்துப் போனார்.

கிளியக்கா பேச ஆரம்பித்தாள். எனக்கு உங்க பள்ளிக்கூட குழந்தைகளால் ஒரேதொந்தரவாக உள்ளது. என்னால் நிம்மதி யாக தூங்கக்கூட முடியவில்லை. என்னை எப்படியாவது பிடித்துவிட வேண்டும் என்பதற் காக கூட்டம் கூட்டமா வருகின்றனர். முன்பெல்லாம் சனி, ஞாயிறுதான் வருவார்கள். இப்போதெல்லாம் எல்லாக்கிழமைகளிலும் என்னை விரட்டுகிறார்கள்.

நானும் பறந்து....பறந்து ஓய்ந்து போனேன். என் றெக்கை எல்லாம் வலிக்கிறது. கிளியக்கா பேச...பேச... தலைமை ஆசிரியருக்கு பாவ மாக இருந்தது. மாணவர்கள் மீது கோபம் கோபமாய் வந்தது. கிளியக்காவின் வருகை பள்ளிக்கூடத்தில் பரவியது. குழந்தைகளால் வகுப்பறையில் உட்கார முடியவில்லை.

கிளியக்காவை மாணவர்கள் ஆரவாரம் செய்தனர். உடற்கல்வி ஆசிரியர் அழைக்கப்பட்டார். குழந்தை களை மைதானத்தில் ஒன்று சேர்க்குமாறு உத்தரவிட் டார் தலைமை ஆசிரியர். மைதா னத்தில் அனைவரும் கூடினர். கிளியக்கா குழந்தைகளோடு பேச ஆரப்பித்தாள். என்னை நீங்கள் பார்க்க ஆசைப்பட்டதால், நானே உங்களை பார்க்க வந்துவிட்டேன். எல்லாரும் ஓஓஓ... கத்தி கைதட்டினர். எங்கிருந்தோ ஒருவன் சத்தமாய் விசில் அடித்தான்.

கிளியக்கா பேசிக்கொண்டே தகரடப்பா தலையில் போயி ஜக்குன்னு உட்கார்ந்து எல்லாரை யும் சுற்றிப்பார்த்தாள். "தகரடப்பா தானே உங்க தலைவரு....என்ற தும் தகரடப்பா முழித்த முழியை பார்த்த எல்லோரும் ஹி......ஹி....ன்னு வாயில் கை வைத்து சிரித்தனர்.

என்னை கூண்டிற்குள் அடைப்பதில் உங்களுக்கு ஏன்ப்பா அவ்வளவு சந்தோசம்? உங்களை யாராவது அப்படி அடைத்தால் உங்களுக்கு எப்படி இருக்கும் சொல்லுங்க பார்ப்போம்"...

குழந்தைகள் அதை நினைத்து பார்க்கவே சங்கடப்பட்டனர். தகரடப்பா எழுந்தான். "கிளியக்கா சாரி. இனிமேல் உங்களை நாங்கள் தொந்தரவு செய்யமாட்டோம்.

இனிமேல் நீங்க எங்க எல்லாருக்கும் ப்ரெண்ட்". என தகரடப்பா கூறினான்.

"அடிக்கடி பள்ளிக்கூடம் வரணும்" என்று எல்லோரும் கோரஸ் பாடினர். கிளியக்கா நெகிழ்ந்து போனாள். தலைமை ஆசிரியர் தன் குழந்தைகளை நினைத்து மகிழ்ந்து நின்றார்.

ஒவ்வொரு வாரமும் நானே உங்களை பார்க்க பள்ளிக்கு வருகிறேன். வரும்போது நான் போய்வந்த ஊர்களின் கதைகளைச் சொல்லுவேன் என்று சொல்லிவிட்டுப் பறந்தாள் கிளியாக்கா. கேட்டின் ஓரமாய் பதுங்கி நின்ற சக்தியும் சில்வண்டும் கிளியக்காவை கண்ணிமைக்காமல் பார்த்தார்கள்.

ஒவ்வொரு வாரமும் நானே உங்களை பார்க்க பள்ளிக்கு வருகிறேன். வரும்போது நான் போய் வந்த ஊர்களின் கதைகளைச் சொல்லுவேன் என்றாள் கிளியாக்கா.

குழந்தைகள் மகிழ்ச்சியில் ஓஓஓஓ என்று ஆரவாரம் செய்தனர். கிளியக்கா புது தெம்புடன் றெக்கை விரித்து பறந்து சென்றாள். கேட்டின் ஓரமாய் பதுங்கி நின்ற சக்தியும் சில்வண்டும் கிளியக்காவை கண்ணிமைக்காமல் பார்த்தார்கள்.

கி.அமுதா செல்வி

பட்டதாரி ஆசிரியர்,

அரசு மேல்நிலைப் பள்ளி,

குலமங்கலம், மதுரை

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in