

பாட்டி சுட்ட வடை.. நான் எப்படி உன்னை நினைக்கல... இப்போ நாம நமக்குத் தெரிஞ்ச கதையை
ஒவ்வொருவருடைய கோணத்தில் சொல்லப் போகிறோம், பாட்டி வடை சுட்ட கதையை..
மாணவன் 1: பாட்டியோட பார்வையிலிருந்து கதையை சொல்ல வேண்டும்.
மாணவன் 2: அந்த கதையை காக்கா உடைய பார்வையிலிருந்து சொல்ல வேண்டும்..
மாணவன் 3: அந்த கதையை வடையுடைய பார்வையில் சொல்ல வேண்டும்..
மாணவன் 4: அந்த கதையை நரியுடைய பார்வையில் சொல்ல வேண்டும்..
சரி, உங்களின் புரிதலுக்காக நான் ஒரு கதையை சொல்கிறேன்... எஸ் ராமகிருஷ்ணன் என்ற எழுத்தாளரின் வீட்டிற்கு இரவில் ஒரு முயல் வருகிறது. அந்த முயல் அவரிடம், "நீங்கள் ‘முயல் ஆமை’ கதையை கேள்விபட்டிருப்பீர்கள். அந்தக் கதை எங்களின் முயல் இனத்தையே அவமானப்படுத்தி விட்டது.
அந்தக் கதையை நீங்கள் மாற்றி எழுத வேண்டும்" என்று கூறுகிறது. "ஏன்" என்று கேட்கிறார்.
"அப்படி ஒரு சம்பவம் நடக்கவே இல்லை. எங்களை சோம்பேறிகளாக இந்த கதை சித்தரிக்கிறது. நாங்கள் அவ்வாறு அல்ல.. இதுவே உங்களை யாராவது தவறாக சொன்னால் நீங்கள்
ஒத்துக்கொள்வீர்களா.. அந்தக் கதையை நீங்கள் மாற்றி எழுத வேண்டும்.."
எழுத்தாளர் யோசிக்கிறார். இவ்வாறாக அந்த கதை செல்கிறது..
இப்போது முயல் ஆமை கதையை முயல் உடைய பார்வையிலிருந்து பார்க்கின்ற பொழுது அதனுடைய நியாயம் புரிகிறதல்லவா.. அதேபோல் நீங்கள் சொல்கின்ற இந்தக் கோணத்தில் அந்த கதாபாத்திரத்தின் நியாயம் புரிய வேண்டும்..
(ஒவ்வொருடைய பார்வையில் இருந்தும் அதற்கான நியாயம் பெறப்படும் வகையில் இந்த அமர்வில் நிகழ்த்தப்பட்டு மனிதர்களை அவர்களுடைய கோணத்திலிருந்து புரிந்து கொள்ளும் திறனை மாணவர்களுக்கு வளர்க்க வேண்டும்)
மேலே குறிப்பிட்டதுபோல பாட்டி வடை சுட்ட கதையை வெவ்வேறு கோணத்தில் எழுதி அனுப்புங்கள்.
கட்டுரையாளர்: நாடகக் கலை மூலம் கல்வி பயிற்றுவிப்பவர்