பட்டியலினத்தவர் இந்து அறநிலையத் துறை அமைச்சர் 

பட்டியலினத்தவர் இந்து அறநிலையத் துறை அமைச்சர் 
Updated on
1 min read

காமராஜர் அமைச்சரவையில் அனைவரும் வியக்கும் அம்சம் என்றால், பி.பரமேஸ்வரனை பட்டியலினம் மற்றும் இந்து அறநிலையத் துறை அமைச்சராக நியமனம் செய்ததுதான்.

அன்றைய காலகட்டத்தில் கோயில்களில் பட்டியலினத்தவர் நுழைவதற்கு கடுமையான எதிர்ப்பு இருந்தது. கண்டிப்புக்காட்டி அதை திருத்த முயல்வதைவிட, புத்திசாலித்தனமாக தீர்க்க முடிவு செய்தார் காமராஜர். அறநிலையத் துறை அமைச்சர் ஒருவருக்கு பூரண கும்ப மரியாதை தர வேண்டியது கோயில் நிர்வாகத்தின் கடமை.

அதனால் பட்டியலினத்தைச் சேர்ந்த ஒருவரை அறநிலையத் துறை அமைச்சராக்கி, கோயிலில் மரியாதையுடன் நுழையவைத்து ஒரு மகத்தான புரட்சியைச் செய்தார் காமராஜர்.

எஸ்.கே.முருகன்,
"பெருந்தலைவர் காமராஜர்" - நூல்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in