

"கணக்கு எனக்கு பிணக்கு.. அப்படின்னு சொல்ற எல்லாரும் கை தூக்குங்க.." என்று ஆசிரியர் கேட்டார்..
நிறைய மாணவர்கள் கைகளை உயர்த் தினார். "உங்களுக்கு எது ரொம்ப கஷ்டமாக இருக்குது?"
மாணவர்களில் ஒருவன், "சார் இந்த வாய்ப்பாடு தான் புரிஞ்சுக்கவே முடியல.."
"பெருக்கல் ரொம்ப முக்கியம் தம்பி நீங்க எல்லாரும் கல்லூரிக்கு பேருந்தில் வரீங்க.. ஒரு பேருந்தில் எத்தனை பேர் வசதியா பயணிக்க முடியும்.."
"எல்லாரும் ஒரு பஸ் வரும் அதுல ஏறி வந்துருவோம் சார்..."
"இல்ல நீங்க எதிர்காலத்துல போக்குவரத்து துறை அதிகாரியா மாறலாம் அப்பவும் ஒரு பஸ் விடுவீங்களா நீங்க..."
"இல்ல சார் நாங்க எவ்வளவோ பேர் இருக்காங்கன்னு கணக்கு பண்ணி அவங்களுக்கு ஏத்தபடி பாஸ் விடுவோம்..."
"அப்போ கணக்கு தேவை தானே அதை பத்தில்லாம் பின்னாடி பார்க்கலாம்.."
"சரி வாய்ப்பாடு நீங்க எப்படி படிக்கிறீங்க சொல்லுங்க பாக்கலாம்."
மாணவர்கள் சத்தமாக வாய்ப்பாடு சொல்லத் தொடங்கினார்.
"சரி சரி. நான் உங்களுக்கு வேறு மாதிரி வாய்ப்பாடு சொல்லித்தரவா?"
"இப்ப நாம இரண்டாவது வாய்ப்பாட்டிலிருந்து ஆரம்பிக்கலாம்.. நீங்க எல்லாரும் வரிசையா ஒன்னு ரெண்டுன்னு சொல்லணும்.. இரண்டால் பெருக்கக்கூடிய எண்கள் உங்களுக்கு வந்தா நீங்க சொல்லக் கூடாது கைகளைத் தட்டுங்க.. இவன் 1 சொல்லுவான் அடுத்தடுத்து இருக்கிறமாணவி 2 என்று சொல்லக்கூடாது கைதட்டனும். அடுத்து இருக்கிறவங்க 3 சொல்லுவாங்க அதுக்கு அப்புறம் இருக்கிறவங்க.. மாணவர்கள் அனைவரும் 4 சொல்லக்கூடாது கைதட்டனும் சரியா."
"சரிங்க சார்.."
(இந்த விளையாட்டை குழுவாக பிரித்து வாய்ப்பாடு போட்டியாகவே நடத்தலாம். ஒரே மாணவர் பல்வேறு வாய்ப்பாடுகளை கைத்தட்டும் விதத்திலும் போட்டி நடத்தலாம்)
கட்டுரையாளர்: நாடகக் கலை மூலம் கல்வி பயிற்றுவிப்பவர்