சாலை பாதுகாப்பை மேம்படுத்தினால் ஆண்டுக்கு 30 ஆயிரம் உயிர்களை காக்கலாம் - ‘லான்செட்’ பத்திரிகை வெளியிட்ட ஆய்வில் தகவல்

சாலை பாதுகாப்பை மேம்படுத்தினால் ஆண்டுக்கு 30 ஆயிரம் உயிர்களை காக்கலாம் - ‘லான்செட்’ பத்திரிகை வெளியிட்ட ஆய்வில் தகவல்
Updated on
1 min read

புதுடெல்லி: இந்தியாவில் சாலைப் பாதுகாப்புநடவடிக்கைகளை மேம்படுத்தினால் ஒரு ஆண்டுக்கு சுமார் 30 ஆயிரம் உயிர்களை விபத்தில் இருந்து பாதுகாக்க முடியும்என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.

சர்வதேச அளவில் வெளியாகும் மருத்துவ வார இதழான ‘லான்செட்’, சமீபத்தில் உலகஅளவில் சாலை பாதுகாப்பு பற்றிநடத்தப்பட்ட ஆய்வு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதன்படி இந்தியாவில் சாலைப் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேம்படுத்த வேண்டும் என்றும் அவ்வாறு சாலைப் பாதுகாப்புநடவடிக்கைகளை மேம்படுத்தினால் நமது நாட்டில் ஒரு ஆண்டுக்கு சுமார் 30 ஆயிரம் உயிர்களை விபத்தில் இருந்து காப்பாற்ற முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் முக்கியமாக சாலைகளில் வாகனங்களில் செல்வோர் விபத்துக்கு உள்ளாகாமல் தடுக்கவும் உயிரிழப்பை தவிர்க்கவும் முக்கியமாக 4 முக்கியகாரணிகள் குறிப்பிடப்பட்டுள்ளன.

அதிவேகமாக வானங்களை ஓட்டுவது, மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவது, இரு சக்கர வாகனங்களில் செல்வோர் ஹெல்மெட் அணியாமல் இருப்பது, கார்களில் செல்வோர் சீட் பெல்ட் அணியாமல் இருப்பது ஆகியவற்றை விபத்துக்கும் உயிரிழப்புக்கும் முக்கியமான 4 காரணிகளாக குறிப்பிடப்பட்டுள்ளன.

இந்தக் காரணிகளை கண்காணித்து சாலைகளில் வாகனங்களில் செல்வோரின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தலைக்கவசம்

வாகனங்களில் அதிவேகமாக செல்வது தடுக்கப்பட்டால் ஆண்டுக்கு 20,554 பேரை உயிரிழப்பில் இருந்து காப்பாற்ற முடியும். விபத்துக்களில் தலையில் அடிபட்டு ஏற்படும் காயத்தால் பலர் உயிரிழக்கின்றனர்.

இதைத் தடுக்க இரு சக்கர வாகனங்களில் செல்வோரிடம் தலைக் கவசம் அணிவது பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி, அவர்கள் ஹெல்மெட் அணிவதை உறுதிப்படுத்த வேண்டும்.அவ்வாறு வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிந்தால் ஆண்டுக்கு 5,683 உயிர்களை காப்பாற்ற முடியும் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.

சீட் பெல்ட்

மேலும், கார்களில் செல்வோரிடம் ‘சீட் பெல்ட்’ அணிவதை உறுதிப்படுத்த வேண்டும்என்றும் , சீட் பெல்ட் அணிவதன் மூலம் விபத்துக்களில் இருந்துஆண்டுக்கு 3,204 உயிர்களைகாப்பாற்ற முடியும் என்றும் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளதாக ‘லான்செட்’பத்திரிகையில் வெளியாகி உள்ள ஆய்வு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மதுஅருந்திவிட்டு வாகனம் ஓட்டுவதால் ஏற்படும் உயிரிழப்புகள் பற்றியும் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவதை தடுத்தால் ஆண்டுக்கு எவ்வளவு உயிர்களை இந்தியாவில் காக்க முடியும் என்ற விவரமும் வெளியிடப்படவில்லை.

இந்தியா உட்பட 185 நாடுகளில் விபத்துகளுக்கு காரணமான 4 முக்கிய காரணிகளை வைத்து இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. ஹெல்மெட் அணிவது, வேகக் கட்டுப்பாட்டை மதித்து மிதமான வேகத்தில் செல்வது, மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டாமல் இருப்பது, கார்களில் செல்வோர் ‘சீட்பெல்ட்’ அணிவது ஆகிய 4காரணிகளைப் பின்பற்றினால் உலக அளவில் ஒவ்வொரு ஆண்டும் 3.47 லட்சம் முதல்5.4 லட்சம் உயிர்களை காப்பாற்றலாம் என்றும் ஆய்வறிக்கையி்ல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in