

கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட்டுவிட்டன. எடுத்தயெடுப்பில் பாடம் படிப்பதை விடவும் கொஞ்சம் படம் பற்றி பேசுவோமா! சிறார் சினிமா கேள்விப்பட்டிருப்பீர்கள்.
குழந்தைகளை வைத்து எடுக்கப்படும் படங்களெல்லாம் சிறார் சினிமா என்ற
பார்வை பரவலாக உள்ளது. உண்மையில், குழந்தைகளின் விருப்பு வெறுப்புகளை, கனவு
களை, கேள்விகளை, காட்சிப்படுத்துவதே சிறார் சினிமா. குழந்தைகள் தங்களுடைய வாழ்கையை எப்படி எதிர்கொள்கிறார்கள், பெரியவர்கள் ஏன் குழந்தைகளின் உலகை புரிந்துகொள்ள மறுக்கிறார்கள் போன்ற கேள்விகளுக்குப் பதிலளிக்க வேண்டும். இதைதான் உலகெங்கும் உள்ள குழந்தை திரைப்பட படைப்பாளர்கள் படமாக்கி வருகிறார்கள்.
இதில் இந்திய குழந்தைகள் பார்த்து ரசிக்கும் படங்களில் 90% வால்ட் டிஸ்னி பிக்சர்ஸ் போன்ற ஹாலிவுட் அனிமேஷன் நிறுவனங்களின் படங்களே. இந்தியாவில் அனிமேஷன் பட தயாரிப்பு இன்னும் தொடக்கக் கட்டத்தில்தான் இருக்கிறது. ஜப்பான், சீனா போன்ற
நாடுகளோ தரமான குழந்தை அனிமேஷன் படங்களை தயாரிக்கின்றன. இதில் ஜப்பான்
திரைப்பட ஜாம்பவான் இயக்குநர் அகிரா குரோசாவாவின் படங்கள் கடந்த 50 ஆண்டு
களாக சினிமா வரலாற்றில் மாபெரும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளன. குழந்தைகளின் உலகை பிரதானப்படுத்தி, ‘சில்ரன் ஆஃப் ஹெவன்’ உள்ளிட்ட படங்களை உருவாக்கிய மஜித் மஜிதி போன்ற ஈரானிய இயக்குநர்கள் தனி தடம் பதித்துள்ளனர். கொரிய படங்களும் குறிப்பிடத்தக்கது.
இந்தியாவை பொருத்தவரை தமிழ் மொழியை விட வங்காளம், மராத்தி, மலை
யாள சினிமாவில் கூடுதல் எண்ணிக்கையில் சிறார் திரைப்படங்கள் தயாரிக்கப்படுகின்றன. இந்த படங்களை கூட திரைப்பட விழாக்களில் மட்டுமே பார்க்க முடியும்.
| சிறந்த இந்திய சிறார் படங்கள் 1. காக்கா முட்டை 2. கூபி கானே பாகே |
சினிமாவை கொண்டாடும் சங்கம்
இந்தியாவில் சத்யஜித் ரேவின் கேமரா கண்கள் குழந்தைகளின் மனதைப் படம்பிடித்
துக் காட்டியது. இவரின் படங்கள் வெறும் பொழுதுபோக்கை மையமாகக் கொண்டிருக்
காமல் சமூக பிரச்சினைகள், குழந்தைகளின் உணர்திறனை மதிக்கும் படைப்புகளாகப் பரிமளித்தன.
இந்தியாவில் குழந்தை சினிமாவின் தேவையை முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு பல இடங்களில் பேசினார். இந்தியத் தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தின்கீழ் குழந்தைகள் திரைப்பட சங்கத்தை 1955இல் நேரு தொடங்கினார். இந்த அமைப்பின் மூலம் இதுவரை 114 படங்கள், 45 அனிமேஷன், 9 பப்பட் ஷோக்கள், 52 குறும்படங்கள் வெளி வந்துள்ளன. இதனை தொடர்ந்து ஆண்டு தோறும் இந்தியாவில் ‘தங்க யானை’ எனும் சர்வதேச குழந்தைகள் திரைப்பட விழாவும் கொண்டாடப்படுகிறது. இதுமாதிரியான முயற்சிகள் அனைத்து மாநிலங்களிலும் முன்னெடுக்கப்பட வேண்டும்.
புதிய திரை மாணவர்கள்
ஏற்கெனவே தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அரசு பள்ளி மாணவர்களுக்கு மாதமொரு முறை சிறந்த உலக சிறார் படங்களை திரையிடுவதும் இந்த கோடை விடுமுறையில் ஆங்காங்கே திரையிடல் நடத்தியதும் நிச்சயம் பாராட்டத்தக்கது. இதுபோக திரைப்பட தொழில்நுட்ப வகுப்பு எடுத்தால் கட்டாயம் நாமும் நல்ல படைப்பாளர்கள், சிறந்த குழந்தை
அனிமேஷன் படங்களை உருவாக்கலாம்.
தமிழில் கலைப்படங்கள் மிக குறைவாக இருப்பதால் தமிழ்நாடு அரசு, குழந்தைகள் திரைப்பட சங்கத்துடன் இணைந்து நல்ல குழந்தை படங்களை தயாரித்து இயக்குநர்
களை ஊக்குவித்து, நிதி உதவி அளித்து அதனை வெளியிடுவதற்குத் திரை அரங்கு
களையும் ஏற்படுத்தித் தந்தால் புதிய திறப்பு ஏற்படும். குழந்தைகள் உலகை மேம்படுத்த நல்ல புத்தகங்கள், திரைப்பள்ளிகள், திரைப்படங்கள், நாடகங்கள், திரையரங்குகளை அமைத்துத் தந்தால் சமூக அக்கறை கொண்ட இளம் திரை படைப்பாளிகளை உருவாக்கலாம்.
- சு.சிந்துஜா
கட்டுரையாளர்: பள்ளி ஆசிரியர், “பெண் ஆடைகளின் வரலாறும் அரசியலும்” உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர்.