கட்டிப்போட்ட காகிதக் கலை

கட்டிப்போட்ட காகிதக் கலை
Updated on
2 min read

என் பொம்ம பல்டி அடிக்கல... ஹேய்ய்ய் ..... என் பொம்ம பல்டி அடிச்சிடுச்சு! மிஸ்! அவன் பொம்மையும் பல்டி அடிச்சுச்சு... ஹைய்யா!! இதுபோல நிறைய பூங்கொத்து நிறைய செஞ்சு நம்ம வகுப்பறைய அலங்காரம் பண்ணலாமா மிஸ்? நம்ம வகுப்பறைய செம்ம அழகா ஆக்கிடலாங்க மிஸ்!

முதல்ல பேப்பர சதுரமா கட்பண்ணு. செவ்வகமா மடிக்கணும்... இப்படி செங்கோண முக்கோண மாட்டம் மடி பா! எவ்வளவு மகிழ்ச்சியான, உற்சாகத்துடன் கூடிய வகுப்பு!! வகுப்பறையில் ஒன்றாதமாணவனையும் தனது மாயாஜாலத் தால் கட்டிப்போடும் காகிதம்.

எனது பள்ளியில் ரோவன் எனும் மூன்றாம் வகுப்பு மாணவன் ஒன்றாம் வகுப்பிலிருந்து ஒரே பள்ளியில் படித்து வருகிறான். பள்ளியிலேயே

குறும்புக்கார மாணவன் அவன்.வகுப்பறையில் ஓரிடத்தில் உட்கார்ந் திருக்க மாட்டான். சக மாணவர்களை அடிப்பதும், ஆசிரியருக்குத் தெரியாமல் வெளியே சென்று வேறு வகுப் பறையை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருப்பதும், ஏதாவது பெஞ்சிற் கடியிலோ, மரங்களுக்கு பின்னாலோ ஒளிந்து கொண்டு ஆசிரியரைத் தேட வைப்பதும், ரெஸ்ட் ரூம் செல்கிறேன் என்று சொல்லிவிட்டு, ஊஞ்சலில் விளையாடிக் கொண்டிருப்பதென சுட்டித் தனத்திற்கு பேர் போனவன்.

பெரும்பாலும் தலைமை ஆசிரியர்வகுப்பறையிலேயே வகுப்பாசிரியர் களால் அமர வைக்கப்பட்டிருப்பான்.

ஒளிந்திருந்த ஆற்றல்

பள்ளிக்கூடத்தில் இப்படியென் றால், இல்லம் தேடி கல்வி வகுப்பிற்கு வரவேமாட்டான். கட்டாயப் படுத்தினால் யார் வீட்டிலாவது சென்று ஒளிந்து கொள்வான் என்றெண்ணி, அவன் விருப்பப்படும்போது இல்லம் தேடி கல்வி வகுப்பிற்கு வரட்டும் என்று விட்டுவிட்டோம்.

அந்த மாணவன் வகுப்பறையில் அமர்ந்தால்தானே கற்றுக் கொள்ள இயலும்? என்ன செய்வது என யோசித்தேன். அப்போதுதான் ஒருஎண்ணம் தோன்றியது. நான் தற் போது பயிலும் காகித மடிப்புக்கலை நினைவுக்கு வந்தது. மாணவருக்கு சொல்லித்தர தயாரானேன்.

ஒருநாள் மாலை இல்லம் தேடி கல்வி வகுப்பில்... படிப்பு என்றாலே பறந்தோடும் ரோவனும் வகுப்பில் அமைதியாக அமர்ந்தான். வாய் பேசாது மழலையாக அமர்ந்து காகித மடிப்புக்கலை வகுப்பினைக் கவனித்துக் கொண்டிருந்தான். அனைவரும் மடிப்பதைப் பார்த்து தானும் மடிக்க ஆரம்பித்தான். நான் கற்றுக் கொடுப்பதைக் கூர்ந்து கவனித்து செய்து முடித்தான்.

<strong>என். அரிட்டா புளோரி</strong>
என். அரிட்டா புளோரி

எனக்கு மட்டுமல்ல. மற்ற மாணவர்களுக்கும் ஒரே ஆச்சர்யம் ரோவன் காகிதக் கலைப் பொருட்களை முதலாவதாக செய்து முடிக்கிறான் என்று!

எல்லோரும் பாராட்டினோம். அவனுக்கு மகிழ்ச்சி தாங்கவில்லை, உற்சாகமானான்.

அன்றிரவே தலைமை ஆசிரியரிடம் ஓரிகாமி வகுப்பில் ரோவனிடம் வெளிபட்ட ஈடுபாடு குறித்து தொலைபேசியில் பேசினேன். அவர் ஆச்சரியத்துடன், இவனுக்குள்ளும் இப்படி ஒரு திறமை ஒளிந்திருக்கிறதா என வியந்தார். வகுப்பிலும் மாற் றம் காணப்பட்டது. விடுமுறை நாட்களிலும் எத்தனை மணிக்கு க்ளாஸ் மிஸ்? மாணவரை மாற்றிய எனக்கு வாழ்த்தும் கூறினார்.

குழந்தைகளின் திறமைகளை நாம் தான் கண்டறிந்து ஊக்குவிக்க வேண்டும்.

அதற்கான கண்கள் நமக்கு வேண்டும் என்பார் பேராசிரியர் ச.மாடசாமி. குழந்தைகளுக்கான சுதந்திரம்... அங்கீகாரம்...

கிடைத்துவிட்டால்போதும் மாற்றம் நிச்சயம் நடைபெறும் என்பதில் ஐயமில்லை.

- என். அரிட்டா புளோரி,

கட்டுரையாளர்: தன்னார்வலர், இல்லம் தேடி கல்வி, காகித மடிப்புக்கலை கருத்தாளர், பெரியநாயக்கன் பாளையம் ஒன்றியம், கோவை.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in