

பொதுத்தேர்வை நமது மாணவர்கள் சிறப்பாக எழுதி வெற்றி பெற உதவும் வழிமுறைகளை பார்க்கவிருக்கிறோம். குழந்தைகளின் படிப்பில் பெற்றோரின் பங்கு எந்த விதத்திலும் குறைந்ததல்ல. அவ்வப்போது தட்டிக்கொடுத்து உற்சாகப்படுத்தி சோர்ந்து விடாமல் ஆறுதல் வார்த்தைகள் கூறி முக்கிய துணையாக இருக்கவேண்டும்.
இதோ தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு பெற்றோர் ஊக்கமளிப்பதற்கான சில டிப்ஸ்:
1. வீட்டில் அமைதியான சூழ்நிலையை ஏற்படுத்தி தருவதில் பெற்றோரின் முழு ஒத்துழைப்பு இருக்கவேண்டும்.
2. படிப்புக்கேற்ற இடம் அமைத்துக் கொடுத்து தொந்தரவு கொடுக்காமல் நல்ல மனநிலையுடன் படிக்கச் செய்யவேண்டும்.
3. அட்டவணைப்படி படிப்பதைக் கண்காணித்தல் வேண்டும்.
4. படிக்க உற்சாகப்படுத்துதல், சலிப்புதோன்றாத வகையில் பாராட்டுதல், உணவு, உடை ஆகியவற்றைத் தக்க முறையில் கொடுத்தல் ஆகியவற் றில் பெற்றோர் பங்கு முக்கியமாக இருக்க வேண்டும்.
5. குழந்தைகள் படித்துக்கொண்டிருக்கும்போது பெற்றோரும் உற்றாரும் தொலைக்காட்சியை பார்த்துக்கொண்டும், சத்தமாகப் பேசிக் கொண்டும் இருந்தால் கவனம் சிதறும் என்பதை உணர வேண்டும்.
6. உங்கள் குழந்தைகள் நடுநிசிவரை படிக்கிறார்கள் என்று பெருமிதம் கொள்ளவேண்டாம். அது அவர்களுக்கு மனச் சோர்வையும், உடல் சோர்வையும் கொடுக்கும். எனவே தேர்வு சமயங்களில் உங்கள் குழந்தைகள் குறைந்தது 7 மணிநேரம் வரை உறங்கவேண்டும்.
வெற்றி பெற வாழ்த்துகள்!
- கட்டுரையாளர்: வே. போதுராசா, முதுகலை பட்டதாரி ஆசிரியர், தேனி; தொடர்புக்கு: pothurasav@gmail.com