

மாணவர்களை ஊக்குவிக்கும் விதமாக நற்பண்பு நிறைந்த நாடகம் நடிக்க சொல்லி அதற்காக ஆறு குழுவாக பிரித்து ஒவ்வொரு குழுவும் ஒரு தலைப்பு சொல்லி செயல்பாடுகளை தொடங்கினர். மாணவர்களுக்குள் ஒரே ஆர்வமும் மகிழ்ச்சியும் பொங்கி எழுந்தது.
பாடத்தை செயல் திட்டமாக செய்யலாம் என்றவுடன் மாணவர் கள் குதூகலமானார்கள். அப்போதுஒவ்வொருவருக்குள் இருக்கும்புதுப்புது திறமைகள் வெளிப்படுகிறது. அது மொழி நடையாக, அன்பின் நாயகனாக, சிந்தனையின் செயல்களாக, வெற்றியின் பரிசாக, கூடி வாழ்ந்து காட்டுகிறார்கள்.
மாணவர்கள் அவர்களுக்கான தலைப்பை அவர்களே தேர்ந்தெடுத் தனர். நம்பிக்கை நாயகன், குறைத்து எடை போடாதே, உடல்சுத்தம், கூடி வாழ்ந்தால் கோடி நன்மை, தேர்வில் வெற்றி பெறுவது எப்படி, மாணவர்களின் மனம் ஆகிய தலைப்புகளை முன்மொழிந்தனர்.
அரங்கேறியது நாடகம்
ஒவ்வொரு குழுவும் தங்களின் திறமையை புது புது கோணத்தில் அரங்கேற்ற. அதைக் காணும் போது ஒவ்வொரு நாடகமும் வியக்க வைக்கிறது. சில நாடகங்கள் சிந்திக்க வைத்தது, நகைச்சுவை உணர்வை ஏற்படுத்தியது, சில நாடகங்களில் கற்பனைத் திறனையும் அறிய முடிந்தது. வகுப்பறையே மகிழ்ச்சியில் ஆனந்த கூத்தாடியது.
நமது செயல்களில் சிறந்தது சிந்தனை செய்வதுதான். கடைக்கோடி மாணவனையும் சிந்திக்க வைப்பது செயல்பாடுகளே. நாம்தன்னம்பிக்கை கொண்டு, உள்ளத்தை பண்படுத்தி, செயலாற் றலைக் கொண்டு சிந்தனை திறனை பெருக்க செயல்பாடுகளே காரணம். சிந்திப்போம் செயல்படுத்துவோம் சிகரத்தின் உச்சியை தொடுவோம்!
து. ஜெயமாலா
எஸ் ஆர் வி சீனியர் செகண்டரி பப்ளிக் பள்ளி, பிராட்டியூர், திருச்சி