

யவனர் என்ற சொல்லை கேள்விப்பட்டிருக்கிறீர்களா? யார் இந்த யவனர்கள்? யவனர்கள் என்று அழைக்கப்பட்டவர்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள்? என்பன போன்ற கேள்விகள் என் சிறு வயதுமுதலே எனக்கு இருந்து கொண்டிருந்தது. இந்தக் கேள்வி உங்களுக்கும் இருக்கும் என்று நினைக்கிறேன். இந்த யவனர்கள் தமிழ்நாட்டோடு வணிகத் தொடர்பு கொண்டு இருந்தார்கள் என்பது அனைவரும் அறிந்த ஒன்றே. அதற்கான சான்றுகள் பல்வேறு தொல்லியல் தளங்களில் இருந்து கிடைக்கிறது.
கிரேக்கர் மற்றும் ரோமானியர் களை யவனர் என்ற பொதுப்பெயரால் தமிழர்கள் அழைத்துள்ள னர். ரோமானியர்கள் தமிழ்நாட்டில் இருந்து மிளகு, முத்து, வாசனைப் பொருட்களை வாங்கிச் சென்று அவர்கள் நாட்டில் வாணிபம் செய் துள்ளனர்.
ரோமானியரான மூத்தபிளினி என்பவர் லத்தின் மொழியில் இயற்கை வரலாறு என்ற நூலை எழுதியுள்ளார். இந்நூலில் ரோமானிய பேரரசு இந்தியாவுடன் கொண்டிருந்த மிளகு வணிகம் பற்றிய குறிப்பு உள்ளது. 40 நாளில்ரோமாபுரியில் இருந்து இந்தியாவுக்கு வந்துவிடலாம் என்ற தகவலும் அந்த நூலில் இடம்பெற் றுள்ளது.
வெறும் இலக்கியச் சான்றுகள் மட்டுமின்றி யவனர்கள் என்றுஅழைக்கப்பட்ட ரோமானியர்கள் வாழ்ந்த குடியிருப்புகளுக்கான சான்றுகள் அரிக்கமேடு, அழகன்குளம் போன்ற இடங்களில் நடந்த அகழாய்வுகளில் கிடைத்துள் ளது. கீழடி அகழ்வாய்வின் போது ரோமானிய மட்பாண்ட துண்டுகள் கிடைத்துள்ளன. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள
வெம்பக்கோட்டை தொல்லியல் மேட்டிலும் ரோமானிய பானைஓடு மட்பாண்டங்கள், அரிட்டைன்,ரவுலட்டடு அம்போரா என பல வகைப்பட்ட ரோமானிய பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
இந்த ஆதாரங்களில் இருந்துசங்ககாலத்திலேயே வெம்பக்கோட்டை, கீழடி போன்ற ஊர்கள் யவனர்களின் நாடுகளுடன் வாணிப தொடர்பு கொண்டிருந்தார்கள் என்பதை சான்றுகளுடன் நிரூபிக்க முடிகிறது.
இஸ்ரேல் மன்னரான சாலமோன் கிமு ஒன்பதாம் நூற்றாண்டில் கட்டிய கோவிலின் சில பகுதிகள் பொன்னாலும் வெள்ளியாலும் செய்யப்பட்டது என்றும் அந்த கோவில் கட்டுவதற்கான தங்கமும் வெள்ளியும் ஓபிர் என்றபகுதியில் இருந்து கொண்டுவரப் பட்டது என்றும் பைபிளில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பைபிள் குறிப்பிடுகின்ற ஓபிர் என்ற நகரம் இந்தியாவின் மேற்கு கடற்கரை ஓரத்தில் இருந்த நகராக இருக்கலாம் என்று வரலாற்று ஆசிரியர்கள் கருதுகிறார்கள். ஏனென்றால் சாலமோனின் அரசவைக்கு பாண்டிய நாட்டின் முத்துக்கள் சென்றன என்ற வரலாற்று குறிப்புகளை அடிப்படையாகக் கொண்டு மேற்கண்ட கருத்துக் களை வரலாற்று ஆய்வாளர்கள் கொண்டிருக்கலாம்.
சாலமோன் கிமு 832-ல் கோயில்கட்டினார் என்று இஸ்ரேலிய இலக்கியம் கூறுகிறது. சங்க காலத்தில் ஆட்சி செய்த பாண்டியர்களின் முத்துக்கள் சாலமனுக்கு சென்றதுஎன்ற வரலாற்று நிகழ்வு உண்மையாக இருந்தால், இதுவரை சங்ககாலம் இன்னும் காலத்தால் முற்பட்டதாக இருக்குமோ என்ற கேள்வி புதிய தேடலுக்குள் நம்மை அழைத்துச் செல்கிறது.
- கட்டுரையாளர் பட்டதாரி ஆசிரியர் அரசு மேல்நிலைப்பள்ளி குலமங்கமலம், மதுரை மாவட்டம்.