

தொழில்துறை வளர்ச்சிக்கு மிக முக்கிய காரணமாக இருப்பதும், வாகனங்களின் வேகத்தை அதிகரிக்க உதவுவதும் டீசல். நீராவி இன்ஜினுக்கு பதிலாக டீசல் இன்ஜினை கண்டுபிடித்தவர் ருடால்ப் டீசல். இவரை பற்றி தெரிந்துகொள்வோமா?
பிரான்ஸ் தலைநகர் பாரிசில் 1858 மார்ச் 18-ம் தேதி ஜெர்மனியில் பிறந்தார் ருடால்ப் டீசல். இரண்டாம் ஷெல்ஸ்விக் போர் காரணங்களால் டீசல் குடும்பம் பிரிட்டனில் குடியேறியது. பிரான்சில் படிப்பை தொடர்ந்தார். இவரது சிந்தனை எப்போதும் இயந்திரங்களின் செயல்பாடுகளை மட்டுமே ஆராய்ந்து கொண்டிருந்தார். ஒரு பொருள் எப்படி இயங்குகிறது? அதன் இயங்கு திறனை அதிகப்படுத்தினால் என்ன என்று யோசித்தார். குளிர்சாதன பெட்டி தொழிற்சாலையில் பணிக்கு சேர்ந்தார். வாகனங்கள் ஏன் இப்படிமெதுவாக செல்கின்றன. அதன் வேகத்தை கூட்டினால் எப்படி இருக்கும். இதன் மூலம் மனிதனின் நேர விரையத்தை தடுக்கலாமே என்று யோசித்து கொண்டிருந்தார்.
அப்படி இருக்கும் போது ஆராய்ச்சியாளர் கார்ல் லெண்டின் சொற்பொழிவு நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ருடால்ப் இவரின் பேச்சை கேட்டுக்கொண்டிருந்தார். நீராவியின் சக்தியால் மட்டுமே இன்ஜீன்கள் இயக்கப்படுகிறது. இதனால் அதிகப்படியான நிலக்கரி செலவிடப்படுகிறது. இதற்கு மாற்றாக வேறொரு பொருளை கண்டுபிடிக்கவேண்டும் என்று கார்ல்லெண்ட் கூறினார். இது ருடால்ப்பின் எண்ணங்களுக்கு வலுசேர்த்தது.
10 ஆண்டுகள் தொடர் ஆராய்ச்சி மற்றும் உழைப்பின் பலனாக டீசல் இன்ஜின்களை உருவாக்கினார். அப்போது நீராவி இன்ஜின் ரயில் உள்ளிட்ட பல வாகனங்களுக்கு பயன்படுத்தப்பட்டு வந்தது. இதற்கு மாறாக “கம்ப்ரஸர் இக்னேஷியஸ்” என்ற இன்ஜினை வடிவமைத்தார். இதற்கு டீசல் இன்ஜின் என்று பெயர் வைக்கப்பட்டது. இதை பலநாடுகளுக்கு விற்பனை செய்வதற்கான காப்புரிமை பெற்றார்.இந்த இன்ஜின் கண்டுபிடிப்போடு நிறுத்திவிடாமல் பெட்ரோலியத்திலிருந்து எடுக்கப்பட்ட எரிபொருள் இன்ஜினுக்கு பயன்படுத்தியபோது அதற்கும் டீசல் என்று பெயரிடப்பட்டது. டீசல் இன்ஜின் மற்றும் டீசல் கண்டுபிடிப்பு தொழில்துறை வளர்ச்சியடைய வித்திட்டுள் ளது.
1897-ம் ஆண்டு தென்அமெரிக்க நாடான உருகுவே ருடால்ப் பெயரில் தபால் தலை வெளியிட்டு கவுரவப்படுத்தியது.