சிறுகதை: என்னை கவர்ந்த ஆசான்

சிறுகதை: என்னை கவர்ந்த ஆசான்
Updated on
1 min read

ஒரு ஊரில் ஒரு சிறுவன் படித்துக் கொண்டிருந்தான். அவனது பெயர் வீரமணி. அவனது படிப்பு சரி இல்லை என்று அவனின் பெற்றோர் அவனை வெளியூருக்கு படிக்க அனுப்பினார்கள். அங்கு அவன் புதிய மாணவன். அவனுக்கு அங்கு நண்பர்கள் இல்லை. அந்த ஆண்டு ஒரு புதிய ஆசிரியர் வந்தார் அவர் பெயர் சுப்ரமணி. அவருக்கு அழகும் அறிவும் அதிகம். வீரமணியை அதிகம் ஊக்கப்படுத்துவார். அதனால் வீரமணிக்குஅவரை மிகவும் பிடிக்கும். அவர்எடுக்கும் பாடங்களை நன்றாக கற்பான். மற்ற பாடங்களிலும் முதலிடம் பெறுவதற்கு முயற்சிப்பான்.

காலாண்டு பரீட்சை முடிந்ததும் அந்த ஆசிரியர் பள்ளியை விட்டுவிலகிவிட்டார். இதனால் வீர மணிக்கு ரொம்ப வருத்தம். அவர் அந்த பள்ளியை விட்டு வெளியேறும் நாளுக்கு முந்தைய நாள், அவன் அவருக்கு ஒரு கவிதை எழுதி அனுப்பினான்.

‘‘உங்களை கண்ட நேரம் அந்த நேரம் என் அறிவாற்றல் கண்திறந்தது என்றும் நீங்கள் நடத்தும் பாடங்கள் கற்பதற்கு சுலபமாக இருக்கிறது. நீங்களே இங்கு இருங்கள் செல்லாதீர்கள்’’ என்று ஒரு காகிதத்தில் எழுதி அவருக்கு தந்தான் வீரமணி.

ஒரு வருடம் கழித்து அவன் மீண்டும் அவரை ஜவுளிக் கடையில் சந்தித்தான். சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தார்கள். பிறகு அவன் 12-ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தான். ஆசிரியர் அறிவுரைப்படி நன்றாகப் படித்து தேர்வு எழுதினான். தரவரிசையில் முதலிடம் பெற்றான். ஏனென்றால் அவன் ஏழாம் வகுப்பு படித்தபோது அவனுக்கு சுப்பிரமணி ஆசிரியர்தான் அறிவியல் பாடம் எடுத்தார். மேற்படிப்புக்கு அடிப்படை இந்த பாடம்தான் என்று சொல்லிக் கொடுத்தார்.

அதை புரிந்து கொண்டு வீரமணி நன்றாக படித்தான். இதனால்தான் தரவரிசையில் முதலிடம் பெற்றான். மேல் படிப்புகள் எல்லாவற்றிலும் முதலிடம் பிடித்தான். அதனால் அவனுக்கு நல்ல வேலை அதிக சம்பளத்துடன் கிடைத்தது. ஆசிரியர்கள் சொல்வதை கேட்டால் நம்மால் வாழ்க்கையில் முதலிடம் பிடிக்க முடியும்.

- இ. ராஜமனோ

கட்டுரையாளர்: 7-ம் வகுப்பு மாணவர், எஸ். ஆர். வி சீனியர் செகண்டரி பப்ளிக் பள்ளி, சமயபுரம், திருச்சி

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in