சுதந்திர சுடர்கள்: விடுதலையில் வீராங்கனைகள்

சுதந்திர சுடர்கள்: விடுதலையில் வீராங்கனைகள்
Updated on
1 min read

இந்தியாவின் 76-வது சுதந்திர தினவிழா நாளை நாடு முழுவதும் மக்கள் கொண்டாட இருக்கின்றனர். பிரிட்டிஷ் ஆதிக்கத்தின்கீழ் இந்தியா இருந்தபோது அவர்களுக்கு எதிராக பலர் போராடினர். அந்த வகையில் நாட்டின் விடுதலைக்காக ஏராளமான பெண்கள் தங்கள் வாழ்க்கையை தியாகம் செய்தனர். அவ்வாறு சுதந்திர போராட்டத்தில் துணிச்சலுடன் பங்கேற்ற வீராங்கனைகள் பற்றி பார்ப்போம்:

கமலாதேவி 1903 ஏப்ரல் 3 அன்றுமங்களூரில் பிறந்தார். சிறுவயதிலேயே இசை, நடனம் மீது ஆர்வம்இருந்தது. 14 வயதில் நடைபெற்றதிருமணம், இரண்டே ஆண்டுகளில்இவரைக் கைம்பெண்ணாக்கியது. கணவரின் மரணத்தோடு வாழ்க்கைமுடிந்து விடுவதில்லை என்பதை உணர்ந்த கமலாதேவி, ராணி மேரிக் கல்லூரியில் சேர்ந்து படித்தார்.

காந்தியுடன் இணைந்து உப்பு சத்தியாகிரகத்தில் பங்கேற்றார். அரசியல் செயல்பாடுகளுக்காக பிரிட்டிஷ் அரசாங்கத்தால் கைதுசெய்யப்பட்ட முன்னோடிப் பெண்களில் முக்கியமானவர் இவர்.

கேரளத்தில் உள்ள பாலக்காட்டில் 1894 ஏப்ரல் 22 அன்று பிறந்த அம்மு சுவாமிநாதன், விடுதலைப் போராட்ட வீராங்கனை மட்டுமல்ல சமூகச் சீர்த்திருத்தவாதியும்கூட. நாட்டு விடுதலையுடன் ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்காகவும் போராடினார். சென்னைக்கு குடிபெயர்ந்தார்.

அங்கே கமலா தேவிசட்டோபாத்யாய, அன்னி பெசன்ட்,டாக்டர் முத்துலட்சுமி, மாலதி பட்டவர்தன், அம்புஜம்மாள் உள்ளிட்டபலருடன் இணைந்து ‘விமன்ஸ்இண்டியா அசோசியேஷ’னைத் தொடங்கினார். 1942-ம் ஆண்டுஒத்துழையாமை இயக்கத்தில் பங்கேற்றதால் வேலூர் சிறையில்ஓராண்டு அடைக்கப்பட்டார். 1946-ல் அரசியல் நிர்ணய சபைக்குமதராஸ் மாகாணம் சார்பாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவரது 4 குழந்தைகளில் ஒருவர் லட்சுமி சாகல்.

லட்சுமி சாகல் 1914-ல்பிறந்தார். நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் வழிநடத்திய இந்திய தேசியராணுவத்தின் ஜான்சி ராணி படைப்பிரிவுக்குத் தலைமை வகித்ததால் கேப்டன் லட்சுமி சாகல் என்று அழைத்தனர். இந்திய தேசிய ராணுவத்தைக் கட்டமைக்கும் பணியில் அவருக்கு உதவியதோடு பெண்கள் படைப்பிரிவுக்கும் தலைமை வகித்தார்.

பிரிட்டிஷ் படைகளைத் தாக்குவதற்காக 1944-ல் இந்திய தேசிய ராணுவத்தைச் சேர்ந்தவர்கள் இம்பாலை நோக்கிச் செல்ல, லட்சுமியின் தலைமையின்கீழ் பெண்கள் ஆயுதமேந்தி அப்போதைய பர்மாவில் தாக்குதல் நடத்தினர். விடுதலைப் போராட்டம், குழந்தைத் திருமணம், வரதட்சிணைக் கொடுமை உள்ளிட்ட பெண்களுக்கு எதிரான நடைமுறைக் கண்டித்துப் போராட்டம் நடத்தினார்.

அருணா ஆசப் அலி 1909-ல்பஞ்சாப் கல்காவில் பிறந்தார். வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் பங்கேற்று உப்பு சத்தியாகிரகத்தின் போது பல அகிம்சை போராட்டங்களில் பங்கேற்றார் . இதற்காக, அவர் ஆங்கிலேயர்களால் கைது செய்யப்பட்டார்.

காந்தி -இர்வின் ஒப்பந்தம் 1931-ல் செய்யப்பட்டது, இது உப்பு சத்தியாக்கிரகத்தின்போது கைது செய்யப்பட்ட அனைவரையும் விடுதலைசெய்வதாக உறுதியளித்தது. ஆனால், அவர்களில் அருணா ஆசப் அலி இல்லை. மற்ற பெண்சுதந்திரப் போராளிகள் மற்றும்மகாத்மா காந்தியின் வலுவானஅகிம்சை வழி போராட்டத்தின் மூலம் அருணா அசப் அலிவிடுதலை செய்யப்பட்டார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in