Last Updated : 02 Aug, 2023 04:25 AM

 

Published : 02 Aug 2023 04:25 AM
Last Updated : 02 Aug 2023 04:25 AM

ஆனந்தத் தேன் சிந்தும் பூஞ்சோலையில்...

தேன் அருவி, தேன் தமிழ், தேன்குழல், தேன்மொழி என இனிமைக்கு உவமையாகக் கூறப்படும் தேனை நமக்குத் தரும் தேனீக்கள் பற்றிய சுவாரசியமான தகவல்களை அறிவோமா!

ட உணவாகத் தருகின்றன.தேனீ ஐந்து கண்களையும், ஆறு கால்களையும் கொண்டிருக்கும் பறக்கக்கூடிய சிறிய பூச்சி இனம். சுற்றுச்சூழல் நலமுடன் உள்ளதா என்பதை தேனீக்களின் புழக்கத்தை கொண்டு நாம் தெரிந்து கொள்ளலாம். மலர்களிலிருந்து அமிர்தத்தையும் (Nectar), மகரந்த தூள்களையும் தனது உணவாக சேகரித்து அதையே நமக்கு தேன்என்ற மகத்தான மருத்துவ குணம் கொண்

இதற்காக ஒரு தேனீ ஒரு நாளில் சுமார் 100 முதல் 150 பூக்கள் வரை செல்கின்றன. ஒரு மணி நேரத்தில் 15 மைல்கள் வரை பயணிக்கின்றன. ஒரு வேலைக்காரத் தேனீ தனது வாழ்நாளில் சராசரியாக 1/12 தேக்கரண்டி (0.5 மில்லி கிராம்) தேனைத் தயாரிக்கிறது. ஒரு தேன் கூட்டில் சுமார் 50 ஆயிரம் தேனீக்கள் வரை கூட்டமாக வாழ்கின்றன.

பல்லுயிர் பெருக்கம்: தேனீக்கள் மிகச் சிறந்த மகரந்த சேர்க்கையாளர்கள் மற்றும் பல்லுயிர்ப் பெருக்கத்தின் ஒரு பகுதியாகத் திகழ்கின்றன. இவை இல்லாவிட்டால் உணவு பொருட்களில் 40 சதவீதம் கிடைக்காது.

ஆப்பிரிக்காவை பூர்வீக பூமியாகக் கொண்டிருந்தாலும் உலகம் முழுமைக்கும் 70 சதவீதம் வரை விவசாய விளை பொருட்களை வழங்குபவையாக உள்ளன. தேன் மெழுகு, ராயல் ஜெல்லி (தேனீ பால்), ப்ரோபோலிஸ் (தேனீ பசை), தேனீ விஷம் (Honeybee venom) ஆகியவற்றை நாம் தேனீக்களிலிருந்து பெறுகிறோம்.

ராணித் தேனீ இடும் முட்டைகளிலி ருந்து வெளிவரும் புழுவிற்கு தொடர்ந்து 16 நாட்கள் ராயல் ஜெல்லி என்னும் தேனீ பசையை உணவாகக் கொடுத்தால் அவை ராணித் தேனீக்களாக வளர்கின்றன. காரமான அமில இனிப்பு சுவையுடன், ராயல் ஜெல்லி இளம் தேனீக்களால் சுரக்கப்படும் ஆரோக்கியமான பொரு ளாகும். இது ராணித் தேனீக்கு உணவாக பயன்படுத்தப்படுகிறது. ஊட்டச்சத்துக்கள் நிறைந்தது. இது உயிரணு வளர்ச்சி மற்றும் இனப்பெருக்கத்திற்கு முக்கியமானது.

நரம்பியல் நோய் சிகிச்சை: தேனீ விஷ மருத்துவம் (Bee venom therapy) தற்போது நம் நாட்டிலும் நடைமுறையில் பெருகி வருகிறது. குறிப்பிட்ட வகைத் தேனீக்களை மனித உடலில் குறிப்பிட்ட இடத்தில் கொட்டும் படி செய்வதால் நோய் எதிர்ப்பு திறன் (Auto immunity) அதிகரிக்கிறது என ஆய்வுகள் கூறுகின்றன. நரம்பியல் நோய்களுக்கான சிகிச்சையில் நல்ல பலனைத் தருகிறது.

தேன் உள்ள மலர்களின் இருப்பிடத்தை துல்லியமாக அறிந்து அங்கே ஒருங்கிணைந்து செல்ல தேனீக்கள் 8 வடிவில் ஆடும் நடனமே தேனீ நடனம் (waggle dance). தேனின் தரம் மற்றும் அளவிற்கு ஏற்றார் போல அவை நடனமாடும் கால அளவும், நடனத்தின் தன்மையும் இருக்கும். ராணித் தேனீதான் தாம் இடும் முட்டையை ஆண் தேனீயாகவோ அல்லது வேலைக்காரத் தேனீயாகவோ மாற்ற முடியும்.

எதிரிகள் யார்? - தேனீக்களின் எதிரிகள் யார்? எறும்புகள், சுளுக்கை, கட்டெறும்பு, குளவிகள், பல்லி, ஓணான், பறவைகள், கரடி. இவை தேனீக்களை தனது உணவாக உட்கொள்பவை. மேலும்பூச்சிக்கொல்லிகள், காடு அழிப்பு, உலக வெப்பமயமாதல், காற்று மாசுபாடு, தட்பவெட்ப நிலை மாற்றத்திற்குக் காரணமான சூழல் மாசுபாடு போன்ற மனித செயல்பாடுகளும் தேனீக்கள் அழியக் காரணமாக இருக்கின்றன. தேனீயின் அழிவு இயற்கை அழிவின் அடையாளம்.

தேனீக்களின் முக்கியத்துவத்தை அறிந்து கொள்ள உலக தேனீ தினம் ஒவ்வொரு ஆண்டும் மே 20 ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. மகரந்த சேர்க்கையாளர்களுக்கு உகந்த விவசாய முறைகளை பின்பற்ற வேண்டும். சுற்றுச்சூழலை பாதுகாப்போம். நமக்கு நன்மை செய்யும் தேனீக்களை வாழ வைப்போம்.

- கட்டுரையாளர்: ஆசிரியர் (தாவரவியல்) அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி பரங்கிப்பேட்டை, கடலூர் மாவட்டம்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x