தக்காளி இந்தியாவிற்கு வந்தது எப்படி?

தக்காளி இந்தியாவிற்கு வந்தது எப்படி?
Updated on
1 min read

நமது அன்றாட உணவில் தக்காளிக்கு முக்கிய இடம் உண்டு. வீட்டு சாப்பாட்டைத் தவிரவும் பல்வேறு விதமான உணவுப்பண்டங்களில் தக்காளி அதிகம் சேர்க்கப்படுவதால் அதன் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

சுவைக்குப் புளியை பயன்படுத்து வதற்குப் பதில் தக்காளியை பயன்படுத்துவது இந்தியர்களிடம் சகஜமாகியுள்ளது. தக்காளியை கொண்டு உருவாக்கப்படும் சாஸ் (sauce) எனும் வகை தொக்கைபீட்சா, பர்கர், சமோசா, ப்ரைட் ரைஸ் உள்ளிட்ட துரித உணவு வகைகளுக்கு தொட்டு உண்பது புதிய உணவு கலாச்சாரத்திலிருந்து பிரிக்க முடியாத ஒன்றாகிவிட்டது.

ஏழைகளின் ஆப்பிள்!? - ஆப்பிள் பழத்தின் விலை அதிகமாக இருக்கும் என்பதால் ஏழைகள் அதிகம் வாங்கி உண்ண முடியாது. அதற்கு ஈடாக தக்காளி கருதப்படுவதால் இது ஏழைகளின் ஆப்பிள் என்று அழைக்கப்படுகிறது. இந்நிலையில், அதிக விளைச்சல் இருக்கும்போது தக்காளியின் விலை சரிந்துவிடும்.

விளைச்சல் குறைவாக இருக்கும்போது விலை அதிகரிக்கும். அதிக விளைச்சல் காரணமாக கிலோ தக்காளி ரூ.10-க்கு கூட விற்றிருக்கிறது. சில நாட்களாகப் பருவ மழையின் காரணமாக விளைச்சல் குறைந்ததால் ராக்கெட் வேகத்தில் தக்காளியின் விலை ரூ.150-ஐ தாண்டியிருக்கிறது. ஆக, ஏழைகளின் ஆப்பிளை ஏழைகள் மட்டுமல்ல நடுத்தர வர்க்க மக்கள்கூட வாங்க திண்டாடும் நிலை தற்போது ஏற்பட்டுள்ளது.

இப்படியாக தக்காளியின் விலையேற்றத்தினால் அடித்தட்டு மக்கள் சிரமப்படுவார்கள் என்பதற்காக நியாய விலை கடைகளில் மலிவு விலையில் தக்காளி விற்க தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது. அவ்வாறு விற்கப்படும் தக்காளியின் விலையும் குட்டி ராக்கெட் வேகத்தில்தான் உள்ளது என்பது கவனிக்கத்தக்கது.

அப்படிப்பட்ட தக்காளி பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்கள் இதோ:

l தக்காளியின் அறிவியல் பெயர் சோலனும் லைக்கோபெர்சிகம் solanum lycopersicum. இது சோலநேசி குடும்பத்தை சேர்ந் தது.

l தக்காளியில் 95 சதவீதம் தண்ணீர் உள்ளது மீதமுள்ள 5 சதவீதத்தில் மாலிக் அமிலங்கள், குளுட்டமேட்ஸ், வைட்டமின் சிமற்றும் லைக்கோ பின் சத்துக்கள் உள்ளன.

l தக்காளி சிகப்பு நிறத்தில் இருப்பதற்கு லைகோ பின் தான் காரணம்.

l ஐரோப்பாவில் விளையும் தக்காளி மஞ்சள் நிறத்தில் இருந்ததுஇதை மஞ்சள் ஆப்பிள் என்று அழைத்தனர்.

l போர்ச்சுகீசியர்கள் தான் தக்காளியை இந்தியாவில் அறிமுகப்படுத்தினர் என்கின்றனர் வரலாற்றாசிரியர்கள்.

l இந்தியாவில் மண் வளம் நன்றாக இருப்பதனால் இங்கு நல்ல விளைச்சல் கிடைக்கும் என்று தக்காளி பயிரிடப்பட்டது.

l பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் தக்காளி பயிரிடப்படும் நிலப்பரப்பு அதிகரிக்கப்பட்டது.

l தக்காளி சாகுபடியில் உலக அளவில் இந்தியா இரண்டாம் இடத்தில் உள்ளது.

l கடந்த ஆண்டில் மட்டும் 2 கோடி டன் தக்காளி இந்தியாவில் விளைந்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in