

‘30 ஆண்டுகளுக்கு முன் இன்போசிஸ் நிறுவனப் பங்கை 10,000 ரூபாய்க்கு வாங்கி இருந்தால், இன்று அது 500 கோடி ரூபாயாக மாறி இருக்கும்' என்ற ஃபார்வர்ட் மெசேஜை வாட்ஸ் அப்பில் நீங்கள் படித்திருப்பீர்கள். இந்த மெசேஜ் உண்மைதான்.
நல்ல நிறுவனத்தின் பங்குகளை வாங்கியவர்கள் சற்று நீண்ட காலம் காத்திருந்தால், எதிர்பார்த்ததை விட பன்மடங்கு லாபம் கிடைக்கும். அதேவேளையில் மோசமான நிறுவனத்தின் பங்குகளை வாங்கினால் அதன் மதிப்பு வீழ்ச்சி அடைந்து கோடீஸ்வரர்களும் தெருவுக்கு வரவேண்டிய நிலை ஏற்படும். எனவே பங்குச்சந்தையில் பணம் போட்டால் கோடீஸ்வரர் ஆகிவிடலாம் என்ற எண்ணத்தில் மட்டும் பங்கை வாங்கக் கூடாது.
தேசிய பங்குச்சந்தை (NSE): இந்தியாவில் பம்பாய், கொல்கத்தா, சென்னை, இந்தோர் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட நகரங்களில் மத்திய அரசின் அங்கீகாரம் பெற்ற பங்குச்சந்தைகள் செயலாற்றி வருகின்றன. இவற்றில் 2 பங்குச் சந்தைகள் முக்கியமானவை. ஒன்று தேசியப் பங்குச்சந்தை (National Stock Exchange of India). மற்றொன்று, பம்பாய் பங்குச்சந்தை (Bombay Stock Exchange) .
தேசியப் பங்குச்சந்தை (NSE) 1993-ம்ஆண்டு முதல் மும்பையில் இயங்கி வருகிறது. இதில் மத்திய அரசின் ‘செபி'யால்அங்கீகரிக்கப்பட்ட 1800க்கும் மேற்பட்ட நிறுவனங்களின் பங்குகள் வர்த்தகம் செய்யப்படுகிறது. இந்த சந்தையில் ஐடிபிஐ, எல்ஐசி, பாரத ஸ்டேட் வங்கி, ஐசிஐசிஐ வங்கி போன்ற இந்தியாவின் முன்னணி நிதி நிறுவனங்கள் வர்த்தகம் செய்கின்றன.
இதில் பதிவு செய்யப்பட்டுள்ள நிறுவனங்களின் செயல்பாட்டின் அடிப்படையில் தினமும் 50 நிறுவனங்கள் பட்டியலிடப்படும். இதன் குறியீட்டு எண்ணுக்கு ‘நிஃப்டி' என்று பெயர். இதில் பட்டியலிடப்பட்ட 50 பங்குகளின் விலை மாற்றங்கள் நிஃப்டி என்ற குறியீட்டால் காட்டப்படும். கட்டிடங்களில் நடைபெற்ற பங்குச்சந்தை வர்த்தகத்தை கணினி மையமாக மாற்றியது தேசிய பங்குச்சந்தைதான்.
1995-ம் ஆண்டு 1000 புள்ளிகளுடன் ஆரம்பிக்கப்பட்ட நிஃப்டி, தற்போது 12 ஆயிரம் புள்ளிகளை கடந்துவிட்டது. உலகிலேயே நிஃப்டி குறியீட்டு எண்தான் மிக அதிகமாக வர்த்தகமாகிறது. இதன் மொத்தச் சந்தை மதிப்பீட்டின் (market capitalization) அடிப்படையில், ஆசியாவின் இரண்டாவது பங்குச்சந்தையாக விளங்குகிறது.
பம்பாய் பங்குச்சந்தை (BSE): ஆசியாவிலே மிக பழமையான பங்குச்சந்தை ‘பம்பாய் பங்குச்சந்தை' (BSE) ஆகும். சீனா, ஜப்பான், சிங்கப்பூரில் பங்குச்சந்தைகள் தொடங்கப்படுவதற்கு முன்பாகவே, 1875-ம் ஆண்டிலே பம்பாயில் தொடங்கப்பட்டது. 'தி நேட்டிவ் ஷேர்
(தொடரும்)
- இரா.வினோத் | கட்டுரையாளர் தொடர்புக்கு: vinoth.r@hindutamil.co.in