கதை கேளு கதை கேளு - 26: ஆதிமனிதன் பாதச்சுவடு பதிந்த பீம்பேட்கா

கதை கேளு கதை கேளு - 26: ஆதிமனிதன் பாதச்சுவடு பதிந்த பீம்பேட்கா
Updated on
2 min read

உலகம் எப்படி தோன்றியது? மனித இனம் எப்போது உருவானது? மனிதன் முதலில் எங்கு உருவானான்? உலகம் முழுவதும் பயணிக்க என்ன தேவை இருந்தது? முதல் மனிதன் எப்படி இருந்தான்?

கீழடி அகழ்வாய்வில் நம் மூதாதையர் பற்றிக் கிடைத்துக்கொண்டிருக்கும் தகவல்களை மையமாக வைத்து சிறார் களுக்காக எழுதப்பட்டிருக்கும் நாவல்தான் பீம்பேட்கா. இளையோர் வாசிக்க ஆர்வம்ஏற்படுத்தும் வகையில், புனைவு இலக்கிய மாக்கியுள்ளார் எழுத்தாளர் உதயசங்கர். பாலு என்ற மேல்நிலைக் கல்வி பயிலும் பருவ வயது மாணவன், பள்ளியில் வரலாறு பாடத்தை விருப்பப் பாடமாக எடுத்துப் படிப்பதாக நாவல் தொடங்குகிறது.

கீழடிக்கு சுற்றுலா: கீழடி அகழாய்வு பகுதிக்கு சுற்றுலா சென்று வருகிறான் பாலு. பிறகு ஆதிமனிதர்கள் யார்? என அறிந்துகொள்ள வரலாற்றுப் புத்தகங்களை தேடித்தேடி வாசிக்கிறான். படித்த தகவல்களை நண்பர்களுடன் பகிர்ந்துகொள்கிறான். பாலுவின் மாமா மகள் மதுமிதாவும் வரலாறு பற்றி அறிவதில் ஆர்வம் கொண்டவளாக இருப்பதால் இருவரும் மனிதன் எப்போது தோன்றியிருப்பான்? தற்போதைய நாகரிக மனிதனாக மாற எத்தனை காலம் பிடித்தது என்பது பற்றி அறிந்துகொள்வதில் தொடர்ந்து வாசிப்பையும் பிறகு இருவருமாக கலந்துரையாடுவதையும் வழக்கமாக கொள்கிறார்கள்.

சேப்பியன்ஸ் என்ற மனித இனம்தான் உலகம் முழுவதும் பரவி இருப்பதாகவும் ஐரோப்பிய நாடுகளில் காக்கேசிய இனமாகவும், ஆசிய நாடுகளில் குறிப்பாக சீனா, ஜப்பான், கொரிய நாடுகளில் மங்கோலிய இனமாகவும், ஆப்பிரிக்க நாடுகளில் நீக்ரோ இனமாகவும், ஆகசேப்பியன்ஸ் இந்த மூன்று இனங்களில்அடங்கிவிடுவர் என்று யுவால் நோவாஹராரி கூறுவதாக காட்சிப்படுத்தப் பட்டுள்ளது.

ஆதிமனிதன்: ஆப்பிரிக்கப் பகுதிகளில்தான் மனிதஇனத்தின் மூதாதையர் தோன்றியிருக் கிறார்கள் என்பதை டோனி ஜோசப், யுவால் நோவா ஹராரி, இந்திய தொல்பொருள் ஆய்வாளர் ஆர்.பாலகிருஷ்ணன் ஆகியோரது புத்தகங்கள் மூலம் உறுதிப்படுத்துகிறார் எழுத்தாளர்.

நாவலின் நாயகனான பாலுவுடன், ஆதன் என்ற புனைவு கதாபாத்திரம் கதை முழுவதும் பயணிக்கிறது. பாலுவுக்கு மனித இனம் தோன்றியது பற்றிய சந்தேகங்கள் வரும்போதெல்லாம் ஆதன் பதில்தந்து பாலுவுக்கு உதவுகிறார். ஆப்பிரிக்கக் காடுகளில் நம் மூதாதைய குரங்குகள் ,தங்கள் குட்டிகளைப் பெற்றுக்கொள்ளும் தருணத்தை ஆசிரியர் விவரிக்க விவரிக்க கண்முன்னே குரங்குக்கூட்டத்தின் மத்தியில் நாமும் நின்று நடப்பதையெல்லாம் வேடிக்கை பார்க்கும் உணர்வை ஏற்படுத்துகிறார்.

சுவாரசிய காட்சி: காட்டின் நிகழ்வுகளை வரிசைப்படுத் தும்போது புலி, கரடி, சிங்கம், காட்டெருமை, மான் கூட பல்வேறு விலங்குகளின் பெயர்களைக் கூறி, விலங்குகளின் செயல்பாடுகளை காட்சிப்படுத்தும் விதத்தில் வர்ணித்து செல்வது எழுபதாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய பூமி, இப்படித்தான் இருந்திருக்குமோ என்ற கற்பனைக்கு அழைத்துச்செல்கிறது.

விலங்குகளின் பெயர் மட்டுமல்ல, காடுகளில் உள்ள மரங்கள், பறவைகள் பெயர்களையும் குழந்தைகள் அறிந்துகொள்ள அறிமுகப்படுத்தியுள்ளார். யுவால்நோவா ஹராரி, டோனி ஜோசப், ஆர்.பாலகிருஷ்ணன் ஆகியோருடன் நேரடியாக பேசுவதாக அமைக்கப்பட்டுள்ள பகுதிகள் மிகுந்த சுவாரசியத்தை தருகின்றன.

உயர்ந்த நிலையில் பெண்கள்: பாலுவின் மாமா மகள் மதுமிதா தன் ஆசிரியரிடம், ஆதிகாலத்தில் மனித இனத்தில் பெண்களின் நிலை எவ்வாறு இருந்தது? என வினவும் கேள்விக்கு அறிவியல் ஆசிரியர் வேள்பாரியின் விளக்கம் ஆச்சரியப்படுத்துகிறது.

பெண்கள்தான் விவசாயத்தை கண்டறிந்தனர், நெருப்பை கண்டுபிடித்து பாதுகாத்தனர், கூட்டமாக வாழ்ந்த மனித இனத்துக்கு தலைவியாய் இருந்து வழிநடத்தினர், ஆண்கள் பெண்களிடம் அஞ்சியே இருந்தனர் என்ற விவரங்களை ஆசிரியர் வேள்பாரி கூறுவதுடன், பத்தாயிரம் வருடங்களாகத்தான் பெண் இனம் ஒடுக்குமுறைக்கு உள்ளாகியுள்ளது என்றும் விளக்குகிறார்.

ஆதிமனிதர்கள் விட்டுச்சென்ற காலத் தின் சுவடுகள் பதிந்த இடம் பீம்பேட்கா. இந்தியாவில் மத்தியப்பிரதேசத்தில் ரெய்சன் மாவட்டத்தில் உள்ள விந்தியமலையின் தெற்குமுனை. பீம்பேட்காவை ஆசிரியர் நம் கண்முன்னே காட்சிப்படுத்தியுள்ளார். ஒவ்வொரு மனிதனும், தன் இனத்தின் முன்னோடி வாழ்ந்த பகுதிகளை பார்க்க வேண்டும் என்ற எண்ணத்தைத் தருகிறது பீம்பேட்காவின் வரலாறு.

குழந்தைகளை கவரும்: உலகில் ஏராளமான மனித இனங்கள் தோன்றியிருந்தாலும் சேப்பியன்ஸ் இன்றுவரை நிலைத்திருக்கக் காரணம் ஒற்றுமையே என்பதை எழுத்தாளர் காட்சிவிளக்கம் மூலம் கூறுகிறார். இளையோர் மனதில் ஒற்றுமையாக வாழவேண்டியதன் அவசியத்தையும் பதித்துச் செல்கிறார்.

குழந்தைகள் அறிந்துகொள்ள வேண்டியமனித இன வரலாற்றை, குழந்தைகளுக் கான மொழியில், ஆர்வமாக வாசிக்கும் வகையில் புனைந்து கொடுத்திருப்பது சிறப்பு.

கட்டுரையாளர்: குழந்தை நேய செயற்பாட்டாளர், ஆசிரியர், அரசு மேல்நிலைப் பள்ளி, திருப்புட்குழி, காஞ்சிபுரம்; தொடர்புக்கு: udhayalakshmir@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in