டிஜிட்டல் கில்லாடி ஆகலாம்! - 28: இன்றைய எலக்ட்ரானிக்ஸ் கற்பது எளிது!

டிஜிட்டல் கில்லாடி ஆகலாம்! - 28: இன்றைய எலக்ட்ரானிக்ஸ் கற்பது எளிது!
Updated on
2 min read

இன்று நாம் ஸ்மார்ட்போனை அதிகம் உபயோகிக்கிறோம். 2003-ம் ஆண்டு நோக்கியா நிறுவனம் 1100 என்ற மொபைல் போனை அறிமுகப்படுத்தியது.

அந்த காலகட்டத்தில் அது மிகவும் பிரபலம். ஆனால், இன்று அதை இலவசமாக கொடுத்தாலும் உபயோகிப்பவர்கள் இல்லை. இன்று பிறந்த குழந்தை கூட ஸ்மார்ட்போனை உபயோகிக்கிறது. அதுபோலதான் எலக்ட்ரானிக் துறையும்.

1906-ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட எலக்ட்ரானிக் துறை மளமளவென வளர்ந்து மிகப் பெரிய ஆலமரமாக வளர்ந்து நிற்கிறது. இந்த 116 ஆண்டுகளில் அது பல்வேறு உருமாற்றங்களை அடைந்துள்ளது. ஆரம்பத்தில் பயன்படுத்திய எலக்ட்ரானிக் பாகங்களை இன்று யாரும் பயன்படுத்துவதில்லை.

மாற்றம் என்பது மாறாதது. நாமும் மாற்றத்திற்கு ஏற்றாரபோல் வாழ கற்றுக் கொள்ள வேண்டும். உதாரணமாக 1000 வருடங்களுக்கு முன்பு நாம் ஒரு ஊரில் இருந்து மற்றொரு ஊருக்கு நடந்து சென்றோம்.

பின்னர் சைக்கிள், பைக், பஸ், கார், ரயில், கப்பல் மற்றும் விமானத்தை உபயோகிக்க ஆரம்பித்தோம். அடிப்படைகள் முக்கியம் அதற்காக நாம் எலக்ட்ரானிக்ஸ் ஆரம்பித்த வருடம் முதல் கற்க ஆரம்பித்தால் நேரம் போதாது. ஆகவே நாம் எலக்ட்ரானிக்ஸின் சில அடிப்படைகளை புரிந்து கொண்டு, நேராக இன்றைய எலக்ட்ரானிக்ஸ் பற்றி புரிந்து கொள்ளலாம்.

பின்னர் எலக்ட்ரானிக்ஸ் வரலாறு பற்றி படிக்கலாம். வரலாறு முக்கியம்தான். ஆனால் இன்றைய எலக்ட்ரானிக்ஸ் அதை விட முக்கியம். எப்படி பயணம் என்பது மாறவில்லையோ, அதே போல் எலக்ட்ரானிக்ஸ் என்பதும் மாறவில்லை. ஆனால் கடந்த ஆயிரம் வருடங்களில் பயணம் செய்யும் முறை மாறியுள்ளது. அதேபோல் எலக்ட்ரானிக்ஸ் செயல்படுத்தும் முறையும் மாறி உள்ளது. இன்று எலக்ட்ரானிக்ஸ் செயல்படுத்தும் முறையை புரிந்து கொள்வது மிகவும் எளிது.

எலக்ட்ரானிக்ஸ் என்பது எலக்ட்ரிக்கல் சிக்கல்களை உள்ளீடாக பெற்று அதனை நமது தேவைக்கு ஏற்ப செயல்படுத்தி பின்னர் எலக்ட்ரிக்கல் சிக்னலாக வெளியீடு செய்கிறது.

சில சமயங்களில் நாம் மிகவும் கடினம் என நினைத்துக் கொண்டிருப்பது மிகவும் எளிதாக இருக்கும்.

உதாரணமாக யானை, குட்டியாக இருக்கும்போது பாகன் சிறிய கயிற்றால் கட்டி வைப்பார். ஆனால், யானை பெரிதாக ஆன பிறகு அதனால் எளிதாக அந்த கயிற்றை அறுத்துக் கொண்டு வெளியே வர முடியும். ஆனால் செய்யாது. அதேபோல்தான் ஆரம்ப காலகட்டங்களில் எலக்ட்ரானிக்ஸ் என்பது கடினமாக இருந்தது. ஆனால். இன்று எலக்ட்ரானிக்ஸ் மிகவும் எளிதாகிவிட்டது. அது எப்படி என்பதை தொடர்ந்து பேசுவோம்.

கட்டுரையாளர், பொறியாளர்,தொழில்நுட்பப் பயிற்றுநர்.

தொடர்புக்கு: balajeeseshadri@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in