டிங்குவிடம் கேளுங்கள் 25: முதல்ல இது தெரிஞ்சாகனும்!

டிங்குவிடம் கேளுங்கள் 25: முதல்ல இது தெரிஞ்சாகனும்!
Updated on
1 min read

சூரியன் இல்லாவிட்டால் பூமி என்னாகும், டிங்கு?

-கே. அஜித் குமார், 9-ம் வகுப்பு, அரசு மேல்நிலைப் பள்ளி அரியலூர்.

பூமி முழுவதும் இருளில் மூழ்கியிருக்கும். குளிர் அதிகமாகும். தாவரங்களால் உணவு தயாரிக்க முடியாது. தாவரங்கள் மடிந்தால், தாவரங்களை நம்பி வாழும் உயிரினங்களுக்கும் உணவு கிடைக்காது. நீர்நிலைகள் எல்லாம் உறைந்துவிடும். விரைவில் வாழ இயலாத கோளாக பூமி மாறிவிடும். சூரியன் இல்லாவிட்டால் பூமியும் இல்லை. சூரியனே அனைத்துக்கும் வாழ்வாதாரம்.

சூரியன் இன்னும் 500 கோடி வருடங்கள்வரை இருக்கும். அதற்குப் பிறகு வெள்ளைக் குள்ளன், கறுப்புக் குள்ளன் போன்ற நிலைகளைக் கடந்து, பூமி போன்ற கோள்களை இழுத்துக் கொள்ளும். அதனால் சூரியன் இல்லாமல் பூமியோ மற்ற கோள்களோ இருக்க முடியாது, அஜித் குமார்.

முதலைக்கும் அலிகேட்டருக்கும் (Alligator) என்ன வித்தியாசம், டிங்கு?

- என். பூர்ணிமா, 5-ம் வகுப்பு, பிச்சாண்டி நடுநிலைப் பள்ளி, போடிநாயக்கனூர், தேனி.

அலிகேட்டர் நன்னீர் நிலைகளில்தாம் வாழும். முதலை நன்னீரிலும் உப்பு நீரிலும் வாழக்கூடியது. அலிகேட்டரின் வாய் U வடிவில் இருக்கும். முதலையின் வாய் V வடிவில் இருக்கும். அலிகேட்டர் வாயை மூடியிருக்கும்போது மேல்தாடைப் பற்கள் வெளியே தெரியும். முதலை வாயை மூடியிருக்கும்போது மேல்தாடை, கீழ்தாடைப் பற்கள் இரண்டு வரிசையுமே வெளியே தெரியும், பூர்ணிமா.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in