

காட்டில் யானை, மான், வரிக்குதிரை, காட்டு முயல் எல்லோரும் சேர்ந்து ஒருங்கிணைந்த பள்ளியில் படித்து வந்தார்கள்.
யானை காலையில் கோயிலுக்குப் போய் சாமி கும்பிட்டுவிட்டு பள்ளிக்கு சரியான நேரத்திற்குச் செல்லும். மானோ துள்ளி துள்ளி குதித்து வகுப்பறையை கட் அடித்துவிட்டு மைதானத்திற்கு சென்று விளையாடும்.
காட்டு முயலோ மீசை போட்டுகிட்டு ஆசிரியர் மேசையை சுற்றி சுற்றி வந்து சேட்டை செய்யும். வரிக்குதிரை வாளியில் தண்ணீர் எடுத்துக் கொண்டு செடிக்கெல்லாம் தண்ணீர் ஊற்றும். இவர்களைப் பார்வையிட ஒட்டகச் சிவிங்கி ஒய்யாரமாக வந்து நிற்கும். அதைப் பார்த்த முயல் தாவி தாவி வந்து வணக்கம் சொல்லியது. ஒட்டகச்சிவிங்கிக்கு முயலைப் பிடித்துப் போனது.
மானோ சட்டை செய்யவில்லை. யானையும் ஒன்றும் அறியாதது போல் இருந்துவிட்டது. வரிக்குதிரை ஒட்டகச் சிவிங்கிக்கு பணிவிடை செய்தது. ஒட்டகச் சிவிங்கி முயலையும், வரிக்குதிரையையும் மன்னரிடம் அழைத்துச் சென்று என் கண்ணுக்கு பண்பான விலங்குகள் இவர்கள் தான் என அறிமுகப்படுத்தியது.
ஒருங்கிணைந்த பள்ளி ஒழுக்கத்தை கற்றுத் தந்தது. இவர்கள் பணிவு என்னை வியப்பில் ஆழ்த்தியது என்று கூறியது. காட்டு முயலை தன் அரண்மனையில் அனுமதித்தது. விதமான உணவு வழங்கி விருந்து உபசரித்து மகிழ்ந்தது. வரிக்குதிரையின் அன்பையும் பணிவையும் பாராட்டி வண்ணமயமான காரை பரிசாக தந்தார். பண்போடு நடந்து கொண்டால் உலகம் உயிர்பெற்று இயங்கும்.
இதைத் தான் வள்ளுவர் பண்புடைய அதிகாரத்தில்
பண்புடையார் பட்டுண்டு உலகம் அஃது இன்றேல்
மண்புக்கு மாய்வது மன். - குறள் 996
என்கிறார்
கட்டுரையாளர்: பள்ளி ஆசிரியர்