

டிஜிட்டல் என்றால் என்ன, அனலாக் என்றால் என்ன, இரண்டுக்கும் உள்ள வித்தியாசம் மற்றும் உபயோகங்கள் பற்றி பார்த்துவிட்டு டிஜிட்டல் எலக்ட்ரானிக்ஸ் பற்றி பார்ப்போம் வாருங்கள்.
மேலே உள்ள படத்தில், சுவிட்சை ஆப் செய்தால் மின்விளக்கு ஒளிராது. சுவிட்சை ஆன் செய்தால் மின்விளக்கு ஒளிரும். இந்த இணைப்பில் மின் விளக்கை பல்வேறு அளவுகளில் ஒளிர வைக்க முடியாது.
மேலே உள்ள இணைப்பில், நாம் மாறும் மின்தடையை மாற்றுவதன் மூலம் மின் விளக்கை பல்வேறு அளவுகளில் ஒளிர வைக்க முடியும். இந்த இரண்டு இணைப்புகளையும் கீழ்க்கண்டவாறு வரையாலாம்.
மேலே உள்ள படத்தில் X புள்ளியில் 0V என்றால் Y புள்ளியிலும் 0V. அதே போல் X புள்ளியில் 5V என்றால் Y புள்ளியிலும் 5V.
அடுத்து உள்ள படத்தில் X புள்ளியில் 1.34 என்றால் Y புள்ளியிலும் 1.34V கிடைக்க வேண்டும். அதேபோல் X புள்ளியில் 2.65V என்றால் Y புள்ளியிலும் 2.65V கிடைக்க வேண்டும். இங்குதான் ஒரு பெரிய சிக்கலே உள்ளது. உதாரணமாக, நாம் பேசினால் நமக்கு மிக அருகில் உள்ளவருக்கு நன்றாக கேட்கும்.
சிறிது தொலைவில் உள்ளவருக்கு சிறிது குறைவாக கேட்கும். அதிக தூரம் சென்றால் கேட்கவே கேட்காது.
அதேபோல் தான் எலக்டிரிக்கல் சிக்னலும்.
எப்படி ஒலிக்கு, தடையாக காற்று உள்ளதோ அதேபோல் மின் கம்பியும் மின்சார ஓட்டத்துக்கு தடையை தரும். ஆகவே எலக்ட்ரிகல் சர்க்யூடில் ஒரு முனையில் தரும் வோல்டேஜ் அடுத்த முனையில் கிடைக்காது. உதாரணமாக நாம் 3.7V அனுப்பினோம் என்றால் அது அடுத்த முனைக்கு வேறு வோல்டேஜாகச் செல்லும்.
அதுவே டிஜிட்டல் எலக்ட்ரானிக்ஸில் 0V முதல் 2V வரை “0” என்றும், 3V முதல் 5V வரை “1” என்றும் குறிப்பிடுகிறார்கள். ஆகவே டிஜிட்டல் எலக்ட்ரானிக்ஸ் 0 மட்டும் 1 மட்டுமே அனுப்ப முடியும். ஆகவே நாம் முதலில் டிஜிட்டல் எலக்ட்ரானிக்ஸ் பற்றி நன்றாக புரிந்து கொண்டு பின்னர் அனலாக் எலக்ட்ரானிக்ஸ் பற்றி பார்க்கலாம். மீண்டும் நினைவுபடுத்துகிறேன் “1” என்பது 5V-ஐயும், “0” என்பது 0V-ஐயும் குறிக்கும். டிஜிட்டல் சர்க்யூட்டில் 5V, 4V-ஆக குறைந்தாலும், டிஜிட்டல் எலக்ட்ரானிக்ஸ் “1” என்று குறித்துக் கொள்ளும்.
தொடர்ந்து டிஜிட்டல் மொழி பேசுவோம்…
கட்டுரையாளர், பொறியாளர், தொழில்நுட்பப் பயிற்றுநர்
தொடர்புக்கு: balajeeseshadri@gmail.com