

கிளியும் காகமும் ஆற்றங்கரையில் உள்ள மரக் கிளையில் நீண்ட நாள் நண்பர்களாக வாழ்ந்து வந்தார்கள். காகம் குருவியிடம் நானோ கருப்பாக அசிங்கமாக இருக்கிறேன். நீயோ அழகா இருக்காய் வேறு யாருடனாவது நட்பு வைத்துக் கொள் என்றது. என்ன அண்ணா இப்படி சொல்றீங்க.
கருப்போ, சிவப்போ உங்க உள்ளம் தானே அழகு. நீங்கள் சாப்பிடும்போது மற்றவர்க்கு கொடுத்து சாப்பிடுவது எனக்கு ரொம்ப பிடிக்கும். அந்த குணம் தானே நம்மை சேர்த்து வைத்தது. ஆமாம் தங்கையே நாம் வாழும் போது பிறருக்கு பயன்பட வேண்டும்.
புயலில் என் வீடு சின்னாபின்னமாகி போன போது எனக்கு நீ தானே இருக்க இடம் கொடுத்து உதவி செய்தாய். அதை மறக்க முடியுமா? ஒருவருக்கொருவர் உதவி செய்து வாழ்வது தான் பயனுள்ள வாழ்க்கை என்று அம்மா சொன்னார்கள். அண்ணா அண்ணா குளிர்காலத்தில் வெளியே போக முடியாது இல்லையா? ஒரே குளிராய் இருக்கும். சோம்பேறியாகவும் இருக்கும். பசி வேறு என்னை வாட்டியது.
இருட்டில் என்ன செய்வதுஎன்று யோசித்துக் கொண்டு இருந்தேன். அந்த நேரம் எறும்பு என்னை அழைத்துச் சென்று புற்றுக்குள் சேமித்து வைத்த உணவை தந்தது. எவ்வளவு நல்ல மனசு பாருங்க. இப்படி தான் நாம் ஒருவருக்கொருவர் உதவி செய்து ஒற்றுமையா வாழனும்.
அந்த நேரம் வேடன் வந்து கிளியும் காகமும் பேசியதைக் கேட்டுக் கொண்டு இருந்து உங்கள் நல்ல உள்ளத்தை வாழ்த்துகிறேன் என்று சொன்னார். எப்படியாவது கிளியும் காகத்தையும் வேட்டையாட வந்தவர் மனம் மாறி திரும்பி விட்டார். பறவைகள் கற்றுத் தந்த பாடத்தை எண்ணி வியந்தே போனார். இதிலிருந்து நாம் பிறர்க்கு உதவி செய்து வாழும் வாழ்க்கையே பயனுள்ளது என்பதை வள்ளுவர் வழியில் குறள் 38
வீழ்நாள் படாமை நன்றாற்றின் அஃதொருவன்
வாழ்நாள் வழி அடைக்கும் கல்
என்பதை அறன் வலியுறுத்தல் என்ற அதிகாரத்தின் மூலம் அறியலாம்.
கட்டுரையாளர்: பள்ளி ஆசிரியர்