

பயணம் என்பது ஓர் இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு செல்வது என்றும், அதற்கு பல்வேறு தரப்பட்ட வாகனங்களை உபயோகிக்கலாம் என்றும் பார்த்தோம். அதேபோல் எலக்ட்ரானிக்ஸ் என்பது எலக்ட்ரிக்கல் உள்ளீடு மற்றும் எலக்ட்ரிக்கல் வெளியீட்டிற்கு இடையே உள்ள தொடர்பு என்றும் பார்த்தோம். இந்த எலக்ட்ரானிக்ஸ் தொழில்நுட்பத்தில் இரண்டு வகைகள் உள்ளன.
முதல் வகையில் உள்ளீடு அல்லது வெளியீடு எலக்ட்ரிக்கல் சிக்னல்கள் 0V-ஆகவோ அல்லது 5V-ஆகவோ இரண்டு நிலைகளில் இருக்கலாம். இரண்டாவது வகையில் உள்ளீடு அல்லது வெளியீடு எலக்ட்ரிக்கல் சிக்னல்கள் 0V-லிருந்து 5V-வரை எந்த நிலைகளில் வேண்டுமானாலும் இருக்கலாம்.
முதல் வகையில் உள்ளீடு அல்லது வெளியீடு எலக்ட்ரிக்கல் சிக்னல்கள் 0V-ஆகவோ அல்லது 5V-ஆகவோ இரண்டு நிலைகளில் இருக்கலாம். இரண்டாவது வகையில் உள்ளீடு அல்லது வெளியீடு எலக்ட்ரிக்கல் சிக்னல்கள் 0V-லிருந்து 5V-வரை எந்த நிலைகளில் வேண்டுமானாலும் இருக்கலாம்.
உதாரணமாக உள்ளீடு “A” சிக்னல் 5V-லும், “B” சிக்னல் 0V-லும், “C” சிக்னல் 5V-லும் இருப்பதாக வைத்துக் கொள்வோம். அதேபோல் வெளியீடு “D” சிக்னல் 5V-லும், “E” சிக்னல் 5V-லும், “C” சிக்னல் 5V-லும் இருப்பதாக வைத்துக் கொள்வோம். இந்த வகை எலக்ட்ரானிக்ஸில் உள்ளீடு அல்லது வெளியீடு
எலக்ட்ரிக்கல் சிக்னல்கள் 0V-ஆகவோ அல்லது 5V-ஆகவோ இருப்பதால் இந்த வகை எலக்ட்ரானிக்ஸை டிஜிட்டல் எலக்ட்ரானிக்ஸ் என்று அழைக்கிறோம்..
மேலே உள்ள படத்தில் M,N மற்றும் O உள்ளீடு சிக்கல்கள் முறையை 1.75V, 3.6V மற்றும் 4.2V ஆகவும், X, Y, மற்றும் Z வெளியீடு சிக்னல்கள் முறை 2.26V, 4.15V மற்றும் 1.1V ஆக இருப்பதால், இதனை அனலாக் எலக்ட்ரானிக்ஸ் என்று அழைக்கிறோம்.
டிஜிட்டல் என்றால் என்ன, அனலாக் என்றால் என்ன, இரண்டுக்கும் உள்ள வித்தியாசம் மற்றும் உபயோகங்கள் பற்றி அடுத்த வாரம் விரிவாக பார்த்துவிட்டு பின்னர் டிஜிட்டல் எலக்ட்ரானிக்ஸ் பற்றி தொடருவோம்.
தொடர்ந்து டிஜிட்டல் மொழி பேசுவோம்…
கட்டுரையாளர், பொறியாளர், தொழில்நுட்பப் பயிற்றுநர்
தொடர்புக்கு: balajeeseshadri@gmail.com