

எலெக்ட்ரானிக்ஸ் அட்டவணை உள்ளீட்டுக்கும் வெளியீட்டுக்கும் உள்ள தொடர்பை கடந்த வாரம் பார்த்தோம். இங்கு கொடுக்கப்பட்டுள்ள படத்தை நன்கு பாருங்கள். இந்தப் படம் எளிமையாக இருக்கிறது. ஆகவே இனி வரும் சர்க்யூட்களில் எல்லா வோல்டேஜ்களும் இந்த பொது புள்ளியை பொருத்தே அமையும் . உபயோகப்படுத்தும் போது எளிதில் புரிந்துவிடும்.
நாம் காலத்திற்கு ஏற்றார் போல் நம்மை மாற்றிக் கொண்டு வாழ்பவர்கள். ஓரிடத்தில் இருந்து அடுத்த இடத்திற்கு செல்ல முன்பு நடந்தோம். இப்போது கார், பஸ், விமானத்தில் பயணிக்கிறோம். அதே போல் 1906-ஆம் ஆண்டு தொடங்கிய எலக்ட்ரானிக்ஸ் பல்வேறு விதமான உருமாற்றங்களை பெற்றது.
எப்படி கைபேசிகள் பல்வேறு உருமாற்றங்களைப் பெற்றன என்பது நமக்கு நன்றாகத் தெரியும். தினமும் புது புது மாடல்கள் அறிமுகமாகின்றன. இன்று நாம் கைபேசி வாங்கும் போது புதிய மாடலாக பார்த்து வாங்குகிறோம். அதே போல் நாமும் 2022-ல் உள்ள எலக்ட்ரானிக்ஸ் பற்றி பார்க்கலாம். வெளியில் எந்த மாற்றமும் கிடையாது. ஆனால் உள்ளே நிறைய மாற்றங்கள் இருக்கும்.
இனி நாம் இன்றைய எலக்ட்ரானிக்ஸை புரிந்து கொள்ள முயல்வோம். மேலே உள்ள சர்க்யூட்டில் I1, I2 மற்றும் I3 உள்ளீடுகள், C1,C2 மற்றும் C3 மின்விளக்குகளைக் கட்டுப்படுத்துகிறது. X1, X2 மற்றும் X3 சுவிட்சுகள், O1, O2 மற்றும் O3 வெளியீடு விளக்குகளைக் கட்டுப்படுத்துகிறது. I1, I2 மற்றும் I3 உள்ளீடுகளுக்கும், O1, O2 மற்றும் O3 வெளியீடுகளுக்கும் தொடர்பே இல்லை. ஆனால் எலக்ட்ரானிக்ஸில் I1, I2 மற்றும் I3 உள்ளீடுகள், O1,O2 மற்றும் O3 வெளியீகளைக் கட்டுப்படுத்த வேண்டும். இது நவீன எலக்ட்ரானிக்ஸில் எவ்வாறு நடக்கிறது என்பதை பற்றி வரும் வாரங்களில் பார்க்கலாம்.
தொடர்ந்து டிஜிட்டல் மொழி பேசுவோம்...
கட்டுரையாளர் பொறியாளர், தொழில்நுட்ப பயிற்றுநர்