கதைக் குறள் 23: மழையின் மகத்துவம்

கதைக் குறள் 23: மழையின் மகத்துவம்
Updated on
1 min read

வானம் பார்த்த பூமியாய் வறண்டு போய் கிடக்கு சின்னசாமி. அந்த பெரியசாமி தான் கண் தொறக்கனும் பச்சைப் பசேல்னு நம்ம பூமி கண்ணுக்கு குளிர்ச்சியா இருக்கும். இப்ப நம்ம மனசு வறண்டது போல பூமியும் வறண்டு போச்சி. ஆடு மாடு எல்லாம் மேயக்கூட புல் இல்லாம பரிதவிக்குதுங்க. வெயில் கொளுத்து கொளுத்துன்னு கொளுத்துது எம் மகன் வெளிநாடு போக பணம் கட்டனும்னு சொன்னான். போன வருஷம் டிராக்டர் வாங்க வங்கியில் வாங்கிய கடன் கட்ட முடியாம கிடக்கு.

ஏ, மழை பெஞ்சா தானே நம்ம ஊரு மாரியாத்தாவுக்கு பூசை புனஸ்காரம் பண்ண முடியும். வானோர்க்கு செய்யும் காரியம் செய்ய முடியும்‌. தினமும் செய்யும் வழிபாடும் வருசா வருசம் செய்யும் கோயில் திருவிழாவும் நடத்த முடியலை. சாதி சனத்தயும் அழைக்க முடியலைன்னு மலைச்சாமி வருத்தப்பட்டார்.

ஆமா ஆமா நானும் பெண்ண கட்டி கொடுக்க முடியலை. கடமையை முடிச்சிட்டு நிம்மதியா இருக்கலாம்னு பார்த்தா வானம் கருணை காட்ட மாட்டேங்குது என்று பேசிக் கொண்டே ஊருக்குள் நுழைய ஆத்தா ஓடி வந்து சேதி தெரியுமா தம்பி, ஒரு வாரத்துக்கு மழை பெய்யும் என்று தொலைக்காட்சியில் சொன்னாங்க என்றது. இரண்டு பேருக்கும் மனசுல பால் வார்த்தது போல் இருந்தது. மாரி ஆத்தாவுக்கு பூசை எல்லாம் சிறப்பா செய்துவிடுவோம் என்று மழைய மலையா நம்பிய மலைச்சாமி சொன்னான்.

இதைத் தான் வள்ளுவர்

சிறப்போடு பூசனை செல்லாது வானம்
வறர்க்கு மேல் வானோர்க்கும் உண்டு

என்றார் (குறள்:18)

கட்டுரையாளர்: பள்ளி ஆசிரியர்

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in