

எலக்ட்ரானிக்ஸ் என்பது முற்றிலும் செயல்வழி மூலமாக கற்றறிய வேண்டிய துறையாகும். சோதனை முறையில் பிரச்சனைக்கு தீர்வு கண்டறிவதன் மூலம் எலக்ட்ரானிக்ஸ் புரிந்து கொள்ள முயல்வோம் வாருங்கள்.
மேலே படத்தில் உள்ள E பிளாக்கிற்கு I1, I2 மற்றும் I3 ஆகிய மூன்று உள்ளீடுகளும் (Input), மற்றும் O1, O2, O3 மற்றும் O4 ஆகிய நான்கு வெளியீடுகளும்(Output) உள்ளன. நாம் எந்த மாதிரியான உள்ளீடு கொடுத்தால் எந்த மாதிரியான வெளியீடு தேவை என்று நாம் தான் முடிவு செய்ய வேண்டும். முதல் உதாரணத்தை பார்க்கலாம்.
O1 வெளியீட்டை வரவேற்பறை மின் விளக்குடனும் (B1), O2 வெளியீட்டை சமையலறை மின்விளக்குடனும் (B2), O3 வெளியீட்டை படுக்கையறை மின்விளக்குடனும் (B3) இணைப்பதாக வைத்துக்கொள்வோம். O4 வெளியீட்டை எதனுடனும் இணைக்கவில்லை என்றும் வைத்துக் கொள்வோம். இப்பொழுது S1 ஸ்விட்ச் வரவேற்பறை மின்விளக்கையும் (B1), S2 ஸ்விட்ச் சமையலறை மின்விளக்கையும் (B2) மற்றும் S3 ஸ்விட்ச் படுக்கையறை மின் விளக்கையும் (B3) கட்டுப்படுத்துவதாக வைத்துக்கொள்வோம்.
S1 ஸ்விட்சை ஆன் செய்தால் I1 உள்ளீட்டிற்கு 5V கிடைக்கும்.
S2 ஸ்விட்சை ஆன் செய்தால் I2 உள்ளீட்டிற்கு 5V கிடைக்கும்.
S3 ஸ்விட்சை ஆன் செய்தால் I3 உள்ளீட்டிற்கு 5V கிடைக்கும்.
மீண்டும் ஒருமுறை கூறுகிறேன், E பிளாக்கிற்கு I1, I2 மற்றும் I3 உள்ளீடுகளை மட்டுமே தெரியும். I1, I2 மற்றும் I3 உள்ளீடுகளில் 5V மட்டுமே வரும். இப்போது நாம் இதற்கு இரண்டு விதங்களில் தீர்வு காணலாம்.
இப்பொழுது, I1 உள்ளீடு பின்னில் 5V வந்தால் வெளியீடு பின் O1-ல் 5V வரும்.
I2 உள்ளீடு பின்னில் 5V வந்தால் வெளியீடு பின் O2-ல் 5V வரும்.
I3 உள்ளீடு பின்னில் 5V வந்தால் வெளியீடு பின் O3-ல் 5V வரும்.
இந்த மூன்று உள்ளீடு பின்களில் 0V அல்லது 5V மட்டுமே வரும். இதனை கீழ்கண்டவாறு அட்டவணைபடுத்தலாம்.
உள்ளீடு சேர்மானங்கள் (காம்பினேசன்கள்)
இப்பொழுது உள்ளீடு மற்றும் வெளியீட்டிற்கான தொடர்பைப் பற்றி பார்க்கலாம்.
சிறிது உற்று நோக்கினாலும், சிறிது முயற்சி செய்தாலும், இந்த அட்டவணையைப் புரிந்து கொள்வது மிக எளிது. இந்த அட்டவணை உள்ளீட்டிற்கும், வெளியீட்டிற்கும் உள்ள தொடர்பை சரியாக விவரிக்கின்றது. இப்போது நமது முதல் பிரச்சினைக்கு தீர்வு கண்டறிந்து விட்டோம். இது மிகவும் எளிதான பிரச்சினை. ஆகவே தீர்வும் மிகவும் எளிது. அடுத்த வாரம் இந்த பிரச்சினைக்கு வேறு முறையில் தீர்வு காணலாம்.
தொடர்ந்து டிஜிட்டல் மொழி பேசுவோம்…
கட்டுரையாளர், பொறியாளர், தொழில்நுட்பப்பயிற்றுநர்