ஊடக உலா-24: மாணவர்களின் அறிவியல் தாகத்தை தணிக்க

ஊடக உலா-24: மாணவர்களின் அறிவியல் தாகத்தை தணிக்க
Updated on
1 min read

மாணவர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் இந்திய சர்வதேச அறிவியல் விழா (India International Science Festival - IISF) வருடந்தோறும் நடந்து வருகிறது. இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம் மற்றும் புவி அறிவியல் அமைச்சகம் நடத்தும் விழா இது.

புதுடெல்லி, லக்னோ, சென்னை, கோவா மற்றும் கொல்கத்தாவில் கடந்த ஆண்டுகளில் நடந்த அறிவியல் விழா இந்த ஆண்டு ஜனவரி 21 முதல் 24 வரை போபாலில் நடைபெற உள்ளது. நாடு முழுவதும் உள்ள மாணவர்கள், ஆய்வாளர்கள், விஞ்ஞானிகள் மத்தியில் பெரிய ஆர்வத்தினை தூண்டியுள்ளது இந்த வருட விழா. இது விஞ்ஞான பாரதியுடன் இணைந்து நாட்டின் புகழ்பெற்ற விஞ்ஞானிகளால் வழிநடத்தப்படும் சுதேசி உணர்வைக் கொண்ட அறிவியல் இயக்கமாகச் செயல்பட்டு வருகிறது.

ஐ.ஐ.எஸ்.எஃபின் முக்கிய நோக்கம்அறிவியலை அனைவரும் கொண்டாடுவதுதான். குறிப்பாக மாணவர்களுக்கு அறிவியலின் முக்கியத்துவத்தினை எடுத்துக் கூறுவதும் அதில் ஒன்றாகும். ஆரோக்கியமான, வளமான மற்றும் அர்த்தமுள்ள வாழ்க்கைக்கு மகிழ்ச்சியான மற்றும் பொழுதுபோக்கு முறையில் அறிவியலுடன் பொது மக்களின் ஈடுபாடும் இதில் அவசியம் என்பதால், அவர்களையும் இதில் இணைத்து ஒவ்வொரு ஆண்டும் இந்த அறிவியல் விழா கொண்டாடப்பட்டு வருகிறது.

ஐ.ஐ.எஸ்.எஃஇன் ஆக்கப்பூர்வமான திட்டங்கள் மற்றும் செயல்பாடுகள் மூலம், இந்தியா மற்றும் உலக நாடுகளில் உள்ள புகழ்பெற்ற விஞ்ஞானிகளை நம் நாட்டிற்கு வரவழைத்து, அவர்கள் மனிதக் குலத்தின் நல்வாழ்வுக்காக அறிவியலை எப்படிப் பரப்பினார்கள் என்பதை மாணவர்களுக்கு அறியத்தருகிறார்கள்.

ஐ.ஐ.எஸ்.எஃப்இன் பயணம் 2015-ல்டெல்லியில் தொடங்கியது. அதன் பின்னர் நாட்டின் வடக்கு, தெற்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் ஐ.ஐ.எஸ்.எஃப்இன் ஏழு சர்வதேச அறிவியல் விழாக்கள் நடந்துள்ளன. கரோனா காரணமாக 2020-ல் இந்த விழாவை நடத்துவது சவாலானது. மெய் நிகர் தளத்தில் நிகழ்ச்சியை நடத்தி வெற்றி கண்டனர்.

இந்திய சர்வதேச அறிவியல் விழாவில் அனைவரும் பங்கேற்கலாம். தெரிவு செய்யப்படும் பங்கேற்பாளர்களுக்குப் பயணப்படி மற்றும் தங்கும் இட வசதிகள் செய்து தரப்படும். மேலும் கலந்துகொள்ளும் அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்படுகிறது. இந்த சர்வதேச அறிவியல் விழாவில் கலந்து கொள்ளப் பதிவு செய்ய scienceindiafest.org/register

(உலா வருவோம்)

கட்டுரையாளர்: உதவி பேராசிரியர், இதழியல் மற்றும் தொடர்பியல் துறை, சென்னைப் பல்கலைக்கழகம், தொடர்புக்கு: bbcsakthi@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in